வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விடாமுயற்சியிலேயே நிற்கும் அஜித்.. தளபதி 69 இயக்குனரையும் லாக் செய்த விஜய்

Thalapathy 69: விஜய் விரைவில் அரசியலில் வரப் போகிறார் என்பது உறுதியான நிலையில் சினிமாவில் பிரேக் எடுக்காமல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். சமீபகாலமாக விஜய்யை பொறுத்தவரையில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அடுத்த படத்தை மட்டுமே புக் செய்து வைத்திருப்பார். லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

லியோ படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலை வாரி குவித்து வருகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 460 கோடி வசூலை லியோ நெருங்கி விட்டதாக தகவல் வெளியானது. மேலும் சமீபத்தில் தளபதி 68 படத்திற்கான பூஜை வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டிருந்தது.

இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், மைக் மோகன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கும் நிலையில் வெங்கட் பிரபு அண்ட் கோவும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு படுபயங்கரமாக செயல்படும்போது தளபதி 69 படத்திற்கான இயக்குனரையும் விஜய் லாக் செய்து விட்டார். இந்த கூட்டணி மாஸ் படம் ஒன்றை கொடுத்திருக்கிறது.

அதாவது விஜய் மற்றும் ஷங்கர் தான் தளபதி 68 படத்தில் கூட்டணி போட இருக்கிறார்கள். இவர்களது காம்போவில் வெளியான நண்பன் படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் மீண்டும் இவர்கள் இணைவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது ஷங்கர் கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இது தவிர தெலுங்கில் ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தையும் ஷங்கர் தான் இயக்கி வருகிறார். ஆகையால் இந்த படங்களை முடித்த கையோடு தளபதி 69 படத்தில் ஷங்கர் கமிட்டாக இருக்கிறார். இந்நிலையில் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் ஒன்றாக தான் திரையரங்குகளில் பொங்கல் ரிலீசுக்கு வெளியானது.

ஆனால் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தில் கமிட்டான நிலையில் தற்போது வரை படப்பிடிப்பு தாமதமாகி கொண்டு இருக்கிறது. ஆனால் விஜய் வாரிசு படத்திற்கு பிறகு லியோ படத்தையும் ரிலீஸ் செய்துவிட்டு தளபதி 68 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். தளபதி 66 படத்திற்கான இயக்குனரும் தெரிந்து விட்டது. ஆனால் அஜித் இப்போது வரை விடாமுயற்சியிலே இருந்து கொண்டிருப்பதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Trending News