சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த வசந்தபாலன்.. 11 வருடங்களுக்குப் பின் நிறைவேறிய தரமான சம்பவம்.!

கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான ஆல்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் வசந்தபாலன். ஆல்பம் திரைப்படத்தில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காவிட்டாலும், அதைத்தொடர்ந்து வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் போன்ற மிகச் சிறந்த படங்களை இயக்கிய பெருமைக்குரியவர் வசந்தபாலன்.

அதிலும் குறிப்பாக வெயில் படத்திற்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வசந்தபாலன் இயக்கிய அங்காடி தெரு படத்தில் துணிக் கடையில் பணிபுரியும் பணியாளர்களின் துயரத்தை தனது படைப்பின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வையும் கண்முன் நிறுத்தி காட்டியிருப்பார்.

தற்போது மாநில தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி வழங்க வேண்டும் என்ற கருத்தை குழுவின் உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டதன் பொருட்டு, 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு,

‘அனைத்து கடைகளிலும் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வழங்க வேண்டும்’ என்று தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. எனவே தமிழக அரசின் இத்தகைய முடிவுக்கு நன்றி கூறுவதாகவும்,

vasanthabalan-cinemapettai
vasanthabalan-cinemapettai

அங்காடி தெரு படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறி வருவதையும் படத்தின் இயக்குனர் வசந்தபாலன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் அங்காடித்தெரு திரைப்படத்தில், தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்தால் கால்களில் ஏற்படக்கூடிய வெரிக்கோஸ் நோய் பற்றி கூறியிருப்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

ஆகையால் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்கும்படி தமிழக அரசு தற்போது உத்தரவிட்டிருப்பதன் மூலம் வெரிக்கோஸ் நோய் அவர்களை தாக்காமல் தடுக்கலாம் என தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் வசந்தபாலன் குறிப்பிட்டுள்ளார்.

Trending News