புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கமலை புராணக் கதை கொடூரனாக நடிக்க வைக்க ஆசை.. ரொம்ப நாளாக முயற்சி செய்து முடியாமல் போன இயக்குனர்

உலகநாயகன் கமலஹாசன் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நேர்த்தியாக செய்யக்கூடியவர். தன்னுடைய கதாபாத்திரங்களுக்காக பல விஷயங்களை ஆராய்ந்து அதற்கு ஏற்ப தன்னை மெருகேற்றிக் கொள்ள கூடியவர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் கூட கமலை நடிக்க வைக்க மணிரத்தினம் விரும்பி இருந்தார்.

ஆனால் அதன் பிறகு தற்போது உள்ள காலகட்ட நடிகர்களை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து மணிரத்னம் வெற்றி கண்டுள்ளார். இந்நிலையில் புராணக் கதையை கொடூரனாக இருக்கும் கதாபாத்திரத்தை படமாக எடுக்க ஒரு இயக்குனர் முயற்சி செய்துள்ளார்.

Also Read : டாப் ஹீரோக்களுக்கு தண்ணி காட்டும் கமல்.. கதி கலங்கி போக வைத்த சம்பவம்

அதுவும் கமலை வைத்து தான் எடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருந்து உள்ளாராம். அதாவது ஒளிப்பதிவாளராக மிகவும் ரசிகர்கள் மத்தியில் பரீட்சியமானவர் ஸ்ரீராம். இவர் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும் மணிரத்தினத்தின் அலைபாயுதே, நாயகன், மௌன ராகம், அக்னி நட்சத்திரம் போன்ற படங்களிலும் இவர் வேலை பார்த்து உள்ளார்.

அதுமட்டுமின்றி கமல் நடிப்பில் வெளியான குருதிப்புனல் படத்தை பிசி ஸ்ரீராம் தான் இயக்கியிருந்தார். இவருடைய நீண்ட நாள் ஆசை என்னவென்றால் ராமனை பற்றிய கதை எடுக்க வேண்டும் என்பதுதான். அதிலும் ராவணனை பற்றிய உண்மைகளை சொல்ல வேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்து வருகிறது.

Also Read : கமலை நம்பி தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்ட 5 தயாரிப்பாளர்கள்.. திருப்பூர் சுப்ரமணியம் வெளியிட்ட லிஸ்ட்

அதாவது ராவணனை பற்றி பல படங்கள் வெளியாகி இருந்தாலும் அவரைப் பற்றிய நிறைய விஷயங்கள் சொல்லவில்லை. மேலும் அந்த ராவணன் கதாபாத்திரத்தில் கமலை நடிக்க வேண்டும் என்று தான் அவருடைய ஆசை. இதை உலகநாயகன் இடமே ஸ்ரீராம் கூறியுள்ளாராம்.

இங்கு ராவணன் அரங்கனாக பார்க்கப்பட்டாலும் தமிழ்நாட்டை தாண்டி பார்த்தால் சீதா தேவியின் அப்பாவாகத்தான் சித்தரிக்கப்படுகிறார். அவரைப் பற்றிய நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துரைக்க நினைக்கும் அவரது ஆசை நீண்ட நாட்களாக தள்ளிப் போகிறது. விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கையில் ஸ்ரீராம் உள்ளார்.

Also Read : தயாரிப்பாளர்களை பெரியளவில் வாழ வைத்த 6 படங்கள்.. கமலை பார்த்து பொறாமை பட்ட ரஜினி

Trending News