திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கொஞ்சம் மிஸ் ஆனா அந்த நடிகையிடம் நீ காலி.. கார்த்தியை எச்சரித்த இயக்குனர்

சமீபத்திய பேட்டி ஒன்றில் கார்த்தி தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவருடைய முதல் படமான ‘பருத்திவீரன்’ படத்தை பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். மேலும் ‘பருத்திவீரன்’ ஜோடி இணைய மீண்டும் வாய்ப்புள்ளதா என்பதை பற்றியும் கூறியுள்ளார்.

உதவி இயக்குனராக இருந்த கார்த்திக்கு 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பருத்திவீரன்’ திரைப்படம் தான் முதலில் அவர் கதாநாயகனாக நடித்த படம். கார்த்திக்கு இப்போது கிராமத்து கதைகள் செட் ஆகிறது, மக்கள் அவரை ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் அதற்கு மிகப்பெரிய காரணம் ‘பருத்திவீரன்’ தான்.

Also Read : கார்த்திக்கு விருது குடுக்கலன்னா அந்த விருதுக்கே மரியாதை இல்ல.. ஓவரா புகழ்ந்த பாட்டி நடிகை

இயக்குனர் அமீர் இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் கார்த்தி, ப்ரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு நடித்த திரைப்படம் ‘பருத்திவீரன்’. இந்த படத்தில் கார்த்திக்கு இணையான, பலமான கேரக்டர் என்றால் அது ப்ரியாமணி ஏற்று நடித்த முத்தழகு கதாபாத்திரம் தான்.

‘கண்களால் கைது செய்’, ‘அது ஒரு கனாக்காலம்’ திரைப்படங்களில் அமைதியான கேரக்டரில் நடித்து வந்த ப்ரியாமணிக்கு இது முற்றிலும் மாறுபட்ட நடிப்பு. பாவாடை-தாவணி, அசட்டு தைரியம், கர்ஜிக்கும் குரல், கார்த்திக்கும், பொன்வண்ணனுக்கும் சவால் விடும்படியான நடிப்பு என ப்ரியாமணி மிரட்டி இருப்பார் .

Also Read : தூரமா நின்னு ரசித்துப் பார்த்த கார்த்தி.. விஜய் ஆல் டைம் ஃபேவரிட் இந்த படம்தான்

சமீபத்தில் விருமன் பட ப்ரமோஷனின் போது, கார்த்தி பருத்திவீரன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். கார்த்திக்கு முதலில் அந்த படத்தில் வட்டார மொழி பேசி அந்த அசைவுகளுடன் நடிக்கவே வரவில்லை என்றும், பல டேக்குகள் வாங்கியதாகவும் கூறினார். அப்போது இயக்குனர் அமீர் கார்த்தி, ப்ரியாமணி இருவரையும் அழைத்து பேசினாராம். பிறகு ப்ரியாமணி சென்றதும், கார்த்தியிடம் ப்ரியாமணி நன்றாக நடிக்கிறார் எனவும் , அவருடனான காட்சிகளில் நீ மிஸ் பண்ணினால் காலி எனவும் கூறினாராம்.

நடிகை ப்ரியாமணி ரசிகர்களின் கேள்வியாக பருத்திவீரன்-முத்தழகு இணைய வாய்ப்புள்ளதா என கேட்டார். அதற்கு பதில் அளித்த கார்த்தி, ஏற்கனவே ‘பையா’ பட சமயத்தில் இது சம்மந்தமான பேச்சுகள் எழுந்து கை கூடாமல் போனதாக கூறினார். மேலும் இவர்கள் இருவரும் இணைந்தால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் என்றும் அதை பூர்த்தி செய்யும் விதமாக கதை அமைந்தால் நடிப்போம் எனவும் கூறியுள்ளார்.

Also Read : தனிக்காட்டு ராஜாவாக விருமன் படத்தின் 7வது நாள் வசூல் விவரம்.. தும்சம் செய்ய வந்த திருச்சிற்றம்பலம்

Trending News