திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

குடி, குடித்தனம் என பெயரை கெடுத்துகொண்ட ஹிட் இயக்குனர்.. குடியிருந்த அப்பார்ட்மெண்டில் வந்த சிக்கல்

ஆரம்பத்தில் இந்த இயக்குனரின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. முதல் படத்திலேயே தனது அசாத்தியமான திறமையை வெளிக்காட்டி இருந்தார். அது மட்டுமல்லாமல் அடுத்த மணிரத்தினம் இவர்தான் என்ற பெயரெல்லாம் எடுத்திருந்தார்.

மேலும் தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இயக்குனர்களில் இவருக்கு தான் வயது குறைவு. இதனால் இந்த சிறு வயதிலேயே தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த அந்த இயக்குனருக்கு பெரும் சறுக்கலாக அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தது. இதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வந்தார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தங்கியிருந்த அப்பார்ட்மெண்டில் குடியும், குடித்தனமுமாக பொழுதை போக்கி வந்துள்ளார். சாப்பாடு, தூக்கம் எதுவுமின்றி முழுநேரமும் குடி மட்டும் தானாம்.

அந்த இயக்குனர் தங்கியிருந்த அபார்ட்மென்ட் வாசிகள் இவரின் நடத்தையைப் பார்த்து முகம் சுளித்து உள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் இவர் எல்லை மீறிப் போக, அக்கம்பக்கத்தினர் சேர்ந்து இவரின் இடத்தை காலி செய்யாவிட்டால் போலீசுக்கு சென்று விடுவோம் என அவரை விரட்டி அடித்துள்ளனர்.

இதனால் அந்த இயக்குனர் செய்வதறியாமல் உள்ளார். வளர்வதற்கு முன்னரே இவ்வளவு கெட்ட பழக்கங்கள் என்று கோடம்பாக்கம் அவரை ஒதுக்கியுள்ளது. இதனால் மீண்டும் அவர் படம் இயக்குவது அவ்வளவு சுலபம் கிடையாது. ஒரு திறமையான இயக்குனர் தனது கெட்ட பழக்கத்தால் இருக்க இடம் கூட இல்லாமல் தவித்து வருகிறார்.

Trending News