வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

நடிகையின் கண்டிஷனை கேட்டு ஆடிப்போன இயக்குனர்.. ஒரு ராத்திரிக்கு மட்டும் இவ்வளவா?

ஒரு காலத்தில் தனக்கு இது போன்ற கேரக்டருக்கு ஏற்றவாறு நடிகை நடிக்க வேண்டும் என இயக்குனர்கள் கண்டிஷன் போட்டு வந்தனர். ஆனால் இப்போது நிலைமை அப்படியே மாறி இருக்கிறது. நடிகைகள் போடும் கண்டிஷன் தான் இயக்குனர் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவர்ந்த நடிகையை பார்த்து இயக்குனர் வியந்த போயிருக்கிறார். மேலும் இயக்குனரின் படத்தில் நடிக்கும் நடிகரும் அந்த நடிகையுடன் ஒரு பாடலில் டான்ஸ் ஆடினால் நன்றாகத் தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

இதனால் நடிகையிடம் கால்ஷுட் வாங்க இயக்குனர் சென்றிருக்கிறார். அவரிடம் நான் ரொம்ப பிசியான ஷெடுகளில் இருப்பதாக நடிகை கூறியிருக்கிறார். உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரே ஒரு நைட்டில் பாடலை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு மேல் என்னால் டேட் கொடுக்க முடியாது. மேலும் அந்த ஒரு நைட்டுக்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதைக் கேட்ட இயக்குனர் அதிர்ச்சி ஆகிவிட்டாராம். இதெல்லாம் கம்பெனிக்கு கட்டுப்படியாகாது சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் நடிகை கால்ஷுட் மற்றும் சம்பள விஷயத்தில் மிகவும் கரராக இருந்திருக்கிறார். இதனால் வேறு நடிகை வைத்தே நல்லபடியாக பாட்டு எடுத்துக் கொள்ளலாம் என்று நடையை கட்டி விட்டாராம் இயக்குனர். மேலும் அந்த நடிகை உடன் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆகிவிட்டது என நடிகர் கவலையில் இருக்கிறாராம்‌.

Trending News