வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்க்கும் சேர்த்து கட்டளையிட்ட இயக்குனர்.. அவஸ்தையில் வாரிசு படக்குழு

விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தின் போஸ்டர்களை விஜய்யின் பிறந்த நாளன்று படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் படத்திற்காக அடுத்த அடுத்த அப்டேட்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

வாரிசு படத்தில் ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, எஸ்ஜே சூர்யா, சங்கீதா, ஷாம் மற்றும் பலர் நடிக்கின்றனர். மேலும் முதன்முறையாக வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

Also Read : மொத்த யூனிட்தையும் குழப்பும் விஜய்.. வாரிசு படத்தில் காட்டும் கஞ்சத்தனம்

இந்நிலையில் வாரிசு படம் தொடங்கியதிலிருந்து அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி படக்குழுவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் படத்தின் கதை ரசிகர்களுக்கு தெரிய அதிக வாய்ப்புள்ளது.

மேலும் தொடர்ந்து இதுபோன்று நடந்து வருவதால் இயக்குனர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது வாரிசு சூட்டிங் ஸ்பாட்டில் யாரும் செல்போன் மற்றும் கேட்ஜட்களை பயன்படுத்தக்கூடாது என வாரிசு இயக்குனர் வம்சி பைடிபைலி கட்டளையிட்டுள்ளார்.

Also Read : விஜய் கலெக்ஷன் அள்ளிய முதல் 50, 100 கோடி படங்கள்.. வசூல் மன்னனாக கிடைத்த அங்கீகாரம்

இது படக்குழுவினருக்கு மட்டுமல்லாமல் விஜய்க்கும் சேர்த்த சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தற்போது வாரிசு படப்பிடிப்பு தளத்தில் செல்போனை யாரும் பயன்படுத்துவது இல்லை என கூறப்படுகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் திருமணத்தை செல்போன் உபயோக கூடாது என ஏகப்பட்ட கெடுபிடிகள் இருந்தது. அதேபோல் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டும் உள்ளதால் படக்குழுவினர் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இனிமேல் வாரிசு படத்தின் ஷூட்டிங் போட்டோஸ் லீக் ஆகாது என்ற நம்பிக்கையில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : தூரமா நின்னு ரசித்துப் பார்த்த கார்த்தி.. விஜய் ஆல் டைம் ஃபேவரிட் இந்த படம்தான்

Trending News