வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

யோகி பாபுவை டப்பிங் தியேட்டரில் அடித்த இயக்குனர்.. பதிலுக்கு பழிவாங்கிய சம்பவம்

ஒரு படத்தின் வெற்றி என்பது ஹீரோக்களை மட்டும் சார்ந்ததல்ல அந்தப் படத்தின் காமெடி நாயகர்களையும் பொறுத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. காமெடிக்கு பெயர் போனவர்களில் வடிவேலு, விவேக், சந்தானம் இவர்களின் வரிசையில் யோகிபாபுவும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்.

முதலில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த யோகிபாபு தனது நடிப்புத் திறமையாலும் அசுர வளர்ச்சியாலும் இன்று ரஜினி, விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களில் நடித்து ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களை கலகலப்பாக்குகிறார்.

Also Read: ஆள் பார்த்து இரண்டு முகம் காட்டும் யோகிபாபு.. அது வேற வாயி இது நாற வாயி

தற்பொழுது யோகி பாபு சதுரங்க வேட்டை 2, ஜெயிலர், மெடிக்கல் மிராக்கிள், அயலான், சலூன் பூச்சாண்டி, தலைநகரம், பூமர் அங்கிள் போன்ற ஏராளமான படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இவர் தற்பொழுது இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் தாதா திரைப்படத்தில் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் படத்திற்கான டப்பிங் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இதில் யோகி பாபுவிற்கு சரியாக டப்பிங் செய்ய வராததால் தாதா பட இயக்குனர் கிஷோர் யோகிபாபு அடித்ததாக கூறப்படுகிறது. இது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஹீரோயின்கள் நடிக்க முடியாது என ஒதுக்கிய 6 ஹீரோக்கள்.. ஆனா இப்ப அவங்க ரேஞ்சே வேற!

மேலும் யோகி பாபு தாதா படத்தில் தான் நடிக்கவில்லை என ட்விட் செய்திருந்தாலும், அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் இப்போது படத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் பயங்கரமான வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார் என இயக்குனர் கிஷோர் குற்றம் சாட்டி உள்ளார்.

ஏனென்றால் தாதா திரைப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில், படத்தின் இயக்குனர் தற்பொழுது பெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதில் யோகிபாபு தான் அடித்ததை மனதில் வைத்துக் கொண்டு தாதா திரைப்படத்தை எந்த தயாரிப்பாளர்களையும் வாங்க விடாமல் தடுப்பதாக அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அழைக்கப்பட்டதாகவும் இயக்குனர் கிஷோர் கூறியுள்ளார். இது கோலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Also Read: யோகி பாபுவின் மசால் வடையாக வந்த ஓவியா.. அதிரடியாக வெளியான பூமர் அங்கிள் டிரைலர்

Trending News