திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யுடன் கூட்டணி போட நடையாய் நடந்த இயக்குனர்.. தளபதியை இம்ப்ரஸ் செய்த கதாபாத்திரம்

வம்சி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் தற்போது விஜய் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதை அடுத்து அவர் எந்த இயக்குனருடன் கூட்டணி போடுவார் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆவலாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ், விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு ரொம்பவும் மெனக்கெட்டு வருகிறாராம். தற்போதைய திரையுலகில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக இருக்கும் விஜய்யுடன் இணைந்து பணிபுரிய பல இயக்குனர்களும் போட்டு வருகின்றனர்.

Also read : வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட் ரிப்போர்ட்.. இரண்டு மடங்கு அதிகம் சம்பளம் வாங்கிய விஜய்

ஆனால் அவர்களுக்கான வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. ஆனாலும் பல முன்னணி இயக்குனர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அப்படித்தான் பாண்டிராஜும் விஜய்யிடம் கதை கூற இரண்டு முறை அவரை சந்தித்தாராம்.

கிராமத்து பாணியில், உறவுகளின் அருமையை பற்றி கதை எடுப்பதில் கில்லாடியான பாண்டிராஜ் விஜய்க்கும் சூப்பரான ஒரு கதையை கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் விஜய் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தை பற்றியும் அவருக்கு தெளிவாக எடுத்து கூறி இருக்கிறார்.

Also read : விஜய்யுடன் கூட்டணி போடும் சூப்பர் ஸ்டார்.. தளபதி-67 சம்பவம் பெருசா இருக்கும் போல லோகேஷ் ப்ரோ

அதை கேட்ட விஜய்க்கு அந்த கதை ரொம்பவும் பிடித்து போய் இருக்கிறது. அதனால் அவர் சிறிது காலம் வெயிட் பண்ணுங்கள் நாம் நிச்சயமாக ஒரு படம் பண்ணலாம் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்கு அந்த கேரக்டர் விஜய்யை ரொம்பவும் இம்ப்ரஸ் செய்து விட்டதாம்.

மேலும் அந்த கேரக்டரில் நடிக்க பொருத்தமாக இருக்க கூடிய ஒரே நபர் விஜய் மட்டும் தான் என்றும், இது அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் பாண்டிராஜ் கூறியிருக்கிறார். கூடிய விரைவில் இவர்களின் கூட்டணி உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ பாண்டிராஜ் நடையாய் நடந்து விஜய்யை ஒரு வழியாக இம்ப்ரஸ் செய்து விட்டார்.

Also read : தளபதியை பின்னுக்கு தள்ளிய மணிரத்னம்.. அசால்டாக 5 நாளில் செய்த சாதனை

Trending News