வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

75 படங்கள் இயக்கி சாதனை படைத்த இயக்குனர்.. ஆலமரம் போல் சிவாஜியை வளர்த்த டைரக்டர்

 Famous Director Has Directed 75 Films: சுவர் இருந்தால் சித்திரம் வரைந்து விடலாம் என்று கூறினாலும் அந்த சித்திரம் வரைய ஒரு சரியான கலைஞர் தேவை. அதாவது நடிகர்களிடம் நடிப்பு திறமை இருந்தாலும் அதை சரியான முறையில் பயன்படுத்துவது இயக்குனர் கையில் தான் இருக்கிறது. சிவாஜியை நடிப்பில் அடித்துக் கொள்ளவே முடியாது என்பது பலரும் அறிந்த விஷயம் தான்.

ஆனால் அவரை இப்படி ஆலமரமாக வளர்த்து விட கண்டிப்பாக ஒரு இயக்குனர் பின்னால் இருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுவரை அதிக படங்கள் இயக்கிய இயக்குனர் என்ற சாதனையையும் அவர்தான் படைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.

Also Read : சிவகுமாரை மிரள வைத்த பொம்பள சிவாஜி.. சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

அதாவது சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களை வளர்த்து விட்டவர் எஸ் பி முத்துராமன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இவரும் இணைந்து கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார்கள். அதேபோல் சிவாஜிக்கு மாபெரும் வெற்றி படங்களை முத்துராமன் தான் கொடுத்திருந்தார்.

எஸ் பி முத்துராமனின் திரை பயணம் 1972 ஆம் ஆண்டு ஜெய்சங்கர், முத்துராமன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான கனி முத்து பாப்பா என்ற படத்தின் மூலம் தொடங்கியது. அதன் பிறகு உச்ச நட்சத்திரங்களின் படங்களை இயக்கி அவர்களையும் வளர்த்துவிட்டு தானும் சினிமாவில் வளர்ந்தார்.

Also Read : எம்ஜிஆரை பார்த்து பதுங்கிய சிவாஜி.. பூரித்துப்போன மக்கள் திலகம்

சிவாஜியுடன் எஸ்பி முத்துராமன் இணைந்து தெய்வப் பிறவி, பராசக்தி போன்ற படங்களை கொடுத்திருந்தார். அதன் பிறகு எண்பதுகளில் நிறைய படங்கள் இவரது நடிப்பில் வெளியானது. இந்நிலையில் 1995 ஆம் ஆண்டு கடைசியாக தொட்டில் குழந்தை என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இப்போது உள்ள இயக்குனர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு படம் ஹிட் கொடுத்து விட்டாலே தலைகனத்தால் ஆடுகிறார்கள். ஆனால் மிகப்பெரிய ஜாம்பவான்களை தமிழ் சினிமாவில் வளர்த்து விட்ட எஸ்பி முத்துராமன் எப்போதுமே எல்லோரிடமும் மிகவும் பணிவாக நடந்து கொள்வாராம். இப்போது வரை அவர் சினிமாவில் நிகழ்த்திய சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

Also Read : ஹீரோவாக நடித்த பொற்காலத்தில் வில்லனாகவும் களமிறங்கிய சிவாஜியின் 5 படங்கள்.. ரங்கோன் ராதா கதாபாத்திரத்தை மறக்க முடியுமா?

Trending News