வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தனுஷ் கால்ஷீட்டிற்கு தடையாய் இருக்கும் இயக்குனர்.. செல்வராகவனையே மிஞ்சிய மனுஷன்

வாத்தி வெற்றிக்கு பிறகு தனுஷிற்கு அடுத்தடுத்த படங்களில் கால்ஷீட் கிடைத்து வருகின்றது. இதை அடுத்து பல இயக்குனர்களும் அவரை வைத்து படம் எடுக்க காத்துக் கிடக்கிறார்கள். இந்த சூழலில் ஒரு இயக்குனர் அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

ரசிகர்கள் இடையே பயங்கர எதிர்பார்ப்பை முன் வைக்கும் விதமாக தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் கேப்டன் மில்லர். இப்படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் சமீபத்தில் செல்வராகவனை வைத்து இயக்கிய படம் தான் சாணி காயிதம். இது அவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது.

Also Read: அடுத்த சர்ச்சைக்கு தயாராகும் வடிவேலு.. பிரம்மாண்டமாக மேடை போட்டு கொடுக்கும் உதயநிதி

மேலும் தற்பொழுது இயக்கி வரும் கேப்டன் மில்லர் படத்தில் ஆரம்பத்திலிருந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறார் தனுஷ். தான் விரும்பிய காரை படப்பிடிப்பிற்கு தரவில்லை எனவும், தன்னை சூட்டிங் ஸ்பாட்டில் கவனிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு வைத்துக் கொண்டே இருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க இயக்குனரை கவலை கொள்ள செய்தாலும், மறுபுறம் படத்தின் காட்சிக்காக குண்டு வெடிப்பது போன்ற சம்பவத்தால் தொடர் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். மேற்கூறிய பிரச்சினைகளை எல்லாம் சரி செய்யவே இவருக்கு நேரம் சரியாக இருப்பதால் படப்பிடிப்பு தாமதம் ஆகி வருகிறது.

Also Read: என் பொண்டாட்டி நடிச்சதிலேயே எனக்கு புடிச்ச படம் இதுதான்.. உலக அழகி நடிப்பில் மயங்கிய பச்சன்

இதைத்தொடர்ந்து தனுஷ் இப்படத்தை இயக்குனர் ஜவ்வாக இழுத்து வருவதாக குற்றச்சாட்டு வைத்து வருகிறார். படம் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது இந்த வருட கிறிஸ்துமஸ்க்கு தள்ளி போய்விட்டதால் இயக்குனர் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார் தனுஷ்.

இது போன்ற காரணத்தால் தன் அடுத்த படத்திற்கான கால்ஷீட்ற்கு தடையாக இருக்கிறார் இயக்குனர் எனவும் கூறி வருகிறார். பொதுவாக செல்வராகவன் தான் இந்த மாதிரி இழுத்து கொண்டே போவார் எனக் கூறிய தனுஷ் இவரை விட அருண் மாதேஸ்வரன் மிகவும் ஜவ்வாக இழுத்துக் கொண்டே இருப்பதாக தன் மனக்குமுறலை வெளிக்காட்டி வருகிறார்.

Also Read: சரண்டர் ஆன வெங்கட் பிரபு.. விஜய் வந்ததும் மாஸ் ஹீரோவை கழட்டிவிட்ட பரிதாபம்

Trending News