வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

Rio: ரியோவின் காதலை சேர்த்து வைக்கப் போகும் இயக்குனர்.. மீண்டும் இணையும் ஜோ டீம்

Rio: சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சிலர் காதல் மட்டும் தான் கை கூடுகிறது. பிறகு கட்டாய திருமணத்தால் ஒவ்வொருவரும் அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த கதையை மையமாக வைத்து கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளிவந்த படம் தான் ஜோ.

இதில் ஹீரோவாக ஜோ கேரக்டரில் ரியோ நடிப்பு எதார்த்தமாக இருந்தது. அத்துடன் உண்மையான காதலும் உணர்ச்சி பூர்வமான வசனங்களும் அனைவரையும் கவர்ந்தது. மேலும் இப்படத்தை பார்த்தவர்கள் அனைவருமே இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை தாண்டி தான் வந்திருப்பார்கள் என்று ஒவ்வொருவரும் கடந்த கால வாழ்க்கையை நினைவூட்டும் விதமாக அமைந்தது.

இதில் ஜோவின் காதலியாக மாளவிகா மனோஜ் மற்றும் கட்டாய திருமணத்தை செய்து கொண்ட நடிகை பவ்யா நடித்திருக்கிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் ஜோவின் காதலி சுசி இறந்து போன சூழ்நிலையில் பவ்யாவை கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒவ்வொரு நாளையும் கடக்க முடியாமல் தவித்து வருவார்.

சுசியுடன் இணைய போகும் ஜோ

இந்த காட்சிகளை பார்க்கும் பொழுது எதற்காக இவர்களுடைய காதலை பிரித்து காட்டுகிறார்கள். இவர்களுடைய காதல் சேர்ந்தால் மட்டும் தான் நன்றாக அமைந்திருக்கும் என பலரும் சில கருத்துக்களை கொடுத்திருந்தார்கள். ஆனால் அதையெல்லாம் சரி செய்யும் விதமாக கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் ஈர்த்துவிட்டார் இயக்குனர்.

joe team commit new project
joe team commit new project

இப்படி சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் அளவில் லாபத்தை கொடுத்து விட்டது. தற்போது ஜோ டீம் மீண்டும் இணையப் போகிறார்கள். அதாவது ரியோ மற்றும் மாளவிகா மனோஜ் மீண்டும் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார்கள். இப்படத்தை ஹரி மற்றும் முத்தையா இயக்கத்தில் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது.

joe team
joe team

சித்து குமார் இசையில் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில் அதற்கான புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ஜோ படத்தில் விட்ட குறை தொட்ட குறையாக பிரிந்து போன காதல் ஜோடிகள் மறுபடியும் அடுத்த படத்தின் மூலம் ஒன்று சேர்த்து பார்க்கும் பொழுது கண்டிப்பாக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News