திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஷங்கரால் காலியான கஜானா.. லைக்காவை காப்பாற்ற போகும் இயக்குனர்

Shankar:தோல்வி படங்களே கொடுக்காத இயக்குனர்களின் பட்டியலில் இருந்த ஷங்கர் இந்தியன் 2 வால் அந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தியன் படம் வெளியாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்போதும் இந்த படம் ஒரு மாஸ்டர் பீஸ் ஆக இருக்கிறது.

இதனால் இந்தியன் 2 படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வந்தது. இந்த சூழலில் ஷங்கரா இந்த படத்தை எடுத்தார் என பலரும் வியக்கும் வகையில் தான் இந்தியன் 2 படம் அமைந்ததாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லை.

இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களுக்காக லைக்கா பெரிய அளவில் பட்ஜெட் போட்ட நிலையில் வசூலை எடுக்க முடியாமல் திணறி வருகிறது. ஷங்கரால் ஏற்பட்ட இந்த நிலைமையை ஈடுகட்ட அந்தப் படத்தில்தான் முடியும் என்ற நம்பிக்கையில் லைக்கா இருக்கிறது.

வேட்டையன் படத்தை நம்பி உள்ள லைக்கா

அதாவது லைக்கா ப்ரொடக்ஷனில் இப்போது அஜித்தின் விடாமுயற்சி மற்றும் ரஜினியின் வேட்டையன் படங்கள் உள்ளது. இதில் ரஜினியின் வேட்டையன் படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். எனவே ஞானவேலை நம்பி தான் லைக்கா நிறுவனம் இருக்கிறதாம்.

ஏனென்றால் படத்தின் கதையின் சுவாரசியம் மட்டும் இன்றி தினமும் எடுக்கும் படப்பிடிப்பு காட்சிகளையும் நிறுவனத்திடம் ஞானவேல் கூறி வருகிறாராம். அதோடு இந்த படத்தில் அமிதாபச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என எக்கச்சக்க பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் வேட்டையன் படம் கண்டிப்பாக லைக்காவுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறது. இந்தியன் 2வை போல் காலை வாரி விடுகிறதா அல்லது வேட்டையன் வெற்றியை வாரி கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தியன் 2 கொடுத்த ஏமாற்றம்

Trending News