வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

முடங்கிப் போய் இருந்த ராஜ்கிரணை தூக்கி விட்ட இயக்குனர்.. பாலா வாய்ப்பு கொடுக்க காரணம்

Actor Rajkiran: ராஜ்கிரன் ஹீரோவாக நடித்து வந்த காலத்தில் தமிழ் சினிமாவையே புரட்டி போடும் அளவிற்கு அனைத்தையும் கற்று ஒரு கை பார்த்து வந்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே இவருக்கு வெற்றி படங்களாகவே கை கொடுத்திருக்கிறது. அந்த அளவிற்கு இவருடைய நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஹீரோவாக நடித்த பிறகு கொஞ்ச காலங்கள் எங்கே போய்விட்டார் என்று தேடும்படியாக இவருடைய நிலைமை ஆகிவிட்டது. அந்த நேரத்தில் தான் இயக்குனர் சேரன் ஒரு கதையே ரெடி பண்ணிய நிலையில் இந்த கதாபாத்திரத்துக்கு மூத்த அண்ணனாக ஒருவர் தேவைப்பட்டதால் அதற்கு சரியான நடிகர் ராஜ்கிரன் தான் என்று முடிவெடுத்து இருக்கிறார்.

Also read: ஹீரோயின் மீது கிரஸ்சாகி தூக்கத்தை தொலைத்த ராஜ்கிரண்.. அம்மாவிடமே சிபாரிசுக்கு சென்ற மாயாண்டி

அதே நேரத்தில் ராஜ்கிரண் நடித்த படம் சரியாக போவதால் ரொம்பவே தேக்கத்தில் இருந்திருக்கிறார். அப்பொழுது யாருமே வேண்டாம் என்று நொந்து போன நிலையில் தனியாக ஒரு வீட்டை வாடகை எடுத்து தங்கி இருந்து வந்திருக்கிறார். அப்பொழுது இவரை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக சேரன் நேரில் போய் சந்தித்திருக்கிறார்.

அங்க போய் பார்த்தால் தனியாக ஏதோ ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்திருக்கிறார். பிறகு இவரிடம் சேரன், அவருடைய கதையை சொல்லி இந்த படத்தில் மூத்த அண்ணனாக நீங்கள் நடித்தால் மட்டும்தான் நன்றாக இருக்கும் என்று இந்த கதாபாத்திரத்தில் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

Also read: ஒரே மாதத்தில் ரிலீசான 4 படங்கள்.. ராஜ்கிரண் உடன் மல்லுக்கட்ட முடியாமல் தோற்றுப் போன ரஜினி

அதன் பிறகு இவர் நடித்த படம் தான் பாண்டவர் பூமி. இப்படம் இவருடைய நடிப்புக்காகவே வெற்றி அடைந்தது என்றே சொல்லலாம். அந்த நேரத்தில் தான் இயக்குனர் பாலாவும், சேரனிடம் அவர் ஒரு கதையே சொல்லி இந்த கதாபாத்திரத்திற்கு ஒரு தகுந்த நடிகரை சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

அப்பொழுது ராஜ்கிரனை பற்றி சொல்லி இவர் நடித்தால் நீங்கள் எதிர்பார்க்கிற அனைத்தும் பூர்த்தி ஆகும் என்று சொல்லி இருக்கிறார். அப்படி பாலா இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த படம் தான் நந்தா. இப்படத்தில் முரட்டு வில்லனாக நடித்து அனைவர் மனதிலும் நச்சென்று இடத்தை பிடித்து விட்டார். அதன்பிறகு சண்டக்கோழி படத்திலும் சண்டியராக நடித்தார்.
இப்படி இவர் நடித்த இந்த மூன்று படங்களிலுமே குணச்சித்திர கேரக்டராக நடித்திருந்தாலும் இப்படங்களுக்கு இவருக்கு தமிழ்நாடு விருது கிடைத்தது.

Also read: அண்ணன் தங்கை சென்டிமென்டை கொண்டாடிய 5 படங்கள்.. நடிப்பில் பாசத்தை தூக்கி சுமந்த ராஜ்கிரண்

Trending News