சமீப காலமாக தமிழ் சினிமாவில் உருவாகும் படங்களை அந்த பிரபல நிறுவனம்தான் வாங்கி வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் சிக்கலில் இருக்கும் பிரபல நடிகரின் படத்தைக் கூட அந்த நிறுவனம்தான் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைத்தது.
மேலும் மெகாபட்ஜெட் படங்கள், புதிய படங்கள் என்று எந்த படங்களாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் பெயரில்தான் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வெளிவந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் அந்த படத்தையும் கைப்பற்ற அந்த நிறுவனம் பெரும் முயற்சி செய்ததாம்.
Also read:கவர்ச்சியை பாதுகாக்க நம்பர் நடிகை போட்ட ஊசி.. பக்க விளைவால் பறிபோன குழந்தை பாக்கியம்
ஆனால் அந்த படத்தின் இயக்குனர் தயாரிப்பு தரப்பிடம் நாமே படத்தை வெளியிட்டு விடலாம் என்று கண்டிப்பாக கூறியிருக்கிறார். இயக்குனரும் படத்தின் தயாரிப்பில் ஒரு பார்ட்னர் என்பதால் தயாரிப்பு நிறுவனமும் அவர் சொல் படியே செய்துவிட முடிவெடுத்தது.
இது அந்த பெரிய நிறுவனத்திற்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. ஏனென்றால் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த திரைப்படம் நிச்சயம் வசூலில் நல்ல லாபம் பெறும் என்பது பட ரிலீசுக்கு முன்பு அனைவரும் அறிந்தது தான். இதனாலேயே அந்த படத்தை ரிலீஸ் செய்து லாபம் பார்க்க அந்த நிறுவனம் ஒரு பிளான் போட்டிருந்தது.
Also read:அப்பாவை போல் மாசாக என்ட்ரி கொடுக்க துடிக்கும் வாரிசு.. ரகசியமாக நடந்து வரும் பயிற்சி
ஆனால் இயக்குனரோ தேவை இல்லாமல் கமிஷன் என்ற பெயரில் பணத்தை எதற்கு கொடுக்க வேண்டும் என்று யோசித்து அவர்களே ரிலீஸ் செய்து விட்டார்கள். இந்த படம் மட்டுமல்லாமல் அதற்கு முந்தைய நாள் வந்த பிரபல நடிகரின் படமும் பெரிய நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை.
படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களே படங்களை சொந்தமாக ரிலீஸ் செய்ததில் லாபமும் எக்கச்சக்கமாக வந்துள்ளது. இதை பார்த்த மற்ற தயாரிப்பாளர்களும் இனி நாமே படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்று முடிவு செய்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பான பேச்சுக்கள் கிளம்பியுள்ளது. இது தொடர்ந்தால் பெரிய நிறுவனத்தின் நிலை என்ன என்றும் திரையுலகில் பேசி வருகின்றனர்.
Also read:காசுக்காக படுக்கையை பகிர சொன்ன நடிகையின் அம்மா.. பாதுகாப்பாக அரவணைத்த பிரபலம்!