வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ராமர் தம்பிக்கு விட்டு சென்ற செருப்ப வச்சு உருட்டுறீங்க! பிபியை ஒரேடியா ஏத்தும் ஜீவானந்தம்

Ethir Neechal: இப்போது ஒட்டு மொத்த சீரியல் ரசிகர்களின் கவனமும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் தான் இருக்கிறது. நேற்றைய தினம் ரசிகர்கள் ஆர்வமாக அடுத்த குணசேகரன் யார் என்பதை பார்ப்பதற்காக காத்திருந்தனர். அதுவும் ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த தொடரின் இயக்குனர் திருச்செல்வம் பிபியை ஒரேடியாக ஏற்றிவிட்டார்.

எல்லோருக்கும் ஏமாற்றம் தரும் விதமாகத்தான் நேற்றைய எபிசோடு அமைந்தது. அதாவது கதிர் மற்றும் ஞானம் இருவரும் தனது அண்ணன் ஆதி குணசேகரனை பார்ப்பதற்காக கோயிலின் வாசலில் காத்துக் கிடக்கிறார்கள். நீண்ட நேரம் தனது அண்ணனின் நினைவுகளை பற்றி பேசிக்கொண்டிருந்த இவர்கள் சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டார்கள்.

Also Read : இந்தாம்மா ஏய், மருமகள்களுக்கு ஆப்படிக்க வரும் புது குணசேகரன்.. பிபி-யை எகிற வைக்கும் எதிர்நீச்சல்

அப்போது குணசேகரன் வந்து தம்பிகளை எழுப்ப வேண்டாம் என்று சாமியாரிடம் சொல்லிவிட்டு அவரது காலணியை மட்டும் விட்டுச் செல்கிறார். அதில் யார் அடுத்த குணசேகரன் என்று காட்டாமல் அவரது கால் மற்றும் கைகளை மட்டுமே காட்டி இருந்தார்கள். அதன் பிறகு கதிர், ஞானம் எழுந்து அண்ணன் எங்கே என்று கேட்கிறார்கள்.

உங்களைப் பார்த்துவிட்டு குணசேகரன் சென்று விட்டார் என்று சொல்லும்போது அவர்கள் நம்பவில்லை. அதன் பிறகு அவருடைய காலணியை காட்டி குணசேகரன் உங்களை எழுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் என்று கூறுகிறார். ராமாயணம் புராணத்தில் அண்ணன் ராமன் அரியணையை விட்ட வனவாசத்திற்கு சென்று விடுவார்.

Also Read : மாஸ் என்ட்ரி கொடுக்கும் குணசேகரன்.. அனல் பறக்கும் எதிர்நீச்சல் டிஆர்பி

அப்போது அவரது தம்பி பரதன் ராமனின் காலணியை வைத்து ஆட்சி செய்வார். இப்போது இயக்குனர் திருச்செல்வமும் செருப்பை வைத்து தான் எதிர்நீச்சல் தொடரை உருட்டுகிறார். அதாவது தனது அண்ணன் குணசேகரன் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று தான் இனி எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

மேலும் அவரைப் பற்றிய பேச்சு அடிக்கடி இந்த தொடரில் வர இருக்கிறது. எதிர்நீச்சல் தொடரில் ட்விஸ்ட் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கண்டிப்பாக குணசேகரனை மிஞ்சிய ஒரு கதாபாத்திரத்தை இயக்குனர் விரைவில் கொண்டுவர இருக்கிறார். ஆனாலும் குணசேகரன் கதாபாத்திரத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதால் நினைவுகளால் அந்த கதாபாத்திரத்தில் மாரிமுத்து நிறைந்திருக்க போகிறார்.

Also Read : இந்த வார டிஆர்பி-யில் மாஸ் காட்டும் டாப் 6 சீரியல்கள்.. மற்ற சேனல்களை திணறடிக்கும் எதிர்நீச்சல்

Trending News