செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்.. கூட்டணி போட தயாராகும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒரு ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், கேரக்டர் ரோல் என்று எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் அசத்தி விடுவார் மேலும் சில நிமிடங்கள் வந்து போகும் கௌரவ தோற்றம் என்றாலும் அவர் நடிக்க தயங்குவது கிடையாது.

அதனால்தான் மாதத்திற்கு ஒரு படங்களை அவரால் ரிலீஸ் செய்ய முடிகிறது. அவர் நடிப்பில் வெளிவராமல் சில திரைப்படங்கள் கிடப்பில் கிடந்தாலும் கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இவர் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கன்னட இயக்குனர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

Also read:அவசரப்பட்டியே குமாரு.. மேடையில் கெட்ட பழக்கத்தை உளறி சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி

கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி இப்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கன்னட திரைப்படம் தான் காந்தாரா. பிரபல நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்து இருக்கும் அந்த திரைப்படம் கர்நாடகாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் அந்த படத்தின் திரைகதையும், ரிஷப் செட்டியின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் தனுஷ், கார்த்தி உட்பட பல நடிகர்களும் அந்த படத்தை பார்த்து மெர்சல் ஆகி விட்டதாக கூறி வருகின்றனர். இப்படி பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் ரிஷப் செட்டி அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறாராம்.

Also read:கம்மி பட்ஜெட், ஹாட்ரிக் லாபத்தை அசால்டாக பார்த்த விஜய் சேதுபதி.. 6 சூப்பர் ஹிட் படங்களின் லிஸ்ட்

தமிழில் தனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த ரிஷப் செட்டி தற்போது விஜய் சேதுபதியை வைத்து தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஒரு திரைப்படத்தை இயக்க பிளான் செய்து வருகிறார். வித்தியாசமான கதை அமைப்பில் உருவாகும் அந்த திரைப்படத்திற்கு விஜய் சேதுபதி தான் பொருத்தமாக இருப்பார் என்று அவர் நினைக்கிறார். அதனால் இது குறித்த பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி நிச்சயம் இதற்கு சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் அவர் விரைவில் கன்னடத்துறையில் காலடி பதிக்க இருக்கிறார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

Also read:இது என்னடா விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை.. விக்ரம் வேதா படத்தில் நடித்த பிரபலம் வேதனை

Trending News