Actor Rajini: அது என்னவோ தெரியல ரஜினியை அசிங்கப்படுத்தி குளிர் காய்வதில் சிலருக்கு அலாதி பிரியம் இருக்கிறது. அப்படித்தான் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சமீபத்தில் ராமராஜன் ரீ என்ட்ரி கொடுக்கும் சாமானியன் பட விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இயக்குனர் ஆர்.வி உதயகுமார் மேடையில் பேசிய ஒரு விஷயம் தான் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
அதாவது ஒரு விநியோகஸ்தராக இவர் தர்மத்தின் தலைவன் படத்தை வாங்கி இருக்கிறார். ஆனால் அப்படம் இவருக்கு நாலரை கோடி நஷ்டத்தை கொடுத்து விட்டதாம்.
கரகாட்டக்காரன் கொடுத்த லாபம்
அதே சமயம் கரகாட்டக்காரன் படத்தை வாங்கி ஒரு கோடி லாபம் பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
அந்த வகையில் தற்போது இயக்குனர் சித்ரா லட்சுமணன் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். தன்னுடைய சேனலில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் இது நிச்சயம் உண்மை கிடையாது என போட்டு உடைத்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் ஒரு படம் இத்தனை கோடி நஷ்டம் அடைவதற்கு வாய்ப்பே கிடையாது. ஏனென்றால் ஒரு படத்தின் தயாரிப்பு செலவே இத்தனை கோடி எல்லாம் இருக்காது.
ரஜினியை அசிங்கப்படுத்திய இயக்குனர்
அது மட்டுமல்லாமல் ஆர்.வி உதயகுமார் சவுத் பகுதி உரிமையை தான் வாங்கி இருந்தார். அதுவும் 9 லட்சம் கொடுத்து. அப்புறம் எப்படி இத்தனை கோடி நஷ்டம் அடைந்திருக்கும்.
அதேபோல் கரகாட்டக்காரன் மிகப்பெரும் வசூல் லாபம் பார்த்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு பகுதியில் மட்டும் ஒரு கோடி ரூபாய் என்பதும் சாத்தியம் இல்லாதது.
ஆக மொத்தம் மேடையில் இருந்த ராமராஜனை குளிர்விக்க வேண்டும் என்பதற்காகவே ஆர் வி உதயகுமார் இப்படி பேசி இருக்கிறார். ஆனால் அதற்காக ரஜினியை அசிங்கப்படுத்துவது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.