செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட விஜய் ஆண்டனி.. மேடையில் அசிங்கப்படுத்திய இயக்குனர்

விஜய் ஆண்டனி வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது பாலாஜி கே குமார் இயக்கத்தில் கொலை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் சென்னையில் கொலை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் விஜய் ஆண்டனி பேசும்போது உலக தரமான ஒரு படத்தில் நடிப்பதை பெருமையாக கருதுவதாக கூறியிருந்தார். மேலும் கொலை படத்தின் இயக்குனர் பாலாஜி இந்திய சினிமாவுக்கு கிடைத்த தரமான இயக்குனர் என பாராட்டி பேசி இருந்தார்.

Also Read : டிடெக்டிவ் ஏஜென்டாக வித்தியாசமான கதைக்களத்தில் விஜய் ஆண்டனி.. மிரட்டும் கொலை பட டிரைலர்

இந்நிலையில் விஜய் ஆண்டனி ஒரு இயக்குனரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். ஆனால் மேடை நாகரிகம் தெரியாமல் அவர் விஜய் ஆண்டனியை அவமானப்படுத்தி உள்ளார். அதாவது இயக்குனர் மிஷ்கின் தான் கொலை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்தார்.

அவ்விழாவில் பேசிய மிஸ்கின் விஜய் ஆண்டனியின் ஒரு படத்தை கூட நான் பார்த்ததில்லைஎன அவமானப்படுத்தி விட்டார். அதுமட்டுமின்றி மேடை நாகரிகம் இல்லாமல் விஜய் ஆண்டனியை அவன், இவன் என்று பேசி அசிங்கப்படுத்தினார்.

Also Read : கொஞ்சம் கூட நாகரிகம், அறிவே இல்லாத மிஸ்கின்.. மேடையில் பேச கூட தகுதி இல்ல

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டது போல விஜய் ஆண்டனி தன்னுடைய பட விழாவுக்கு மிஸ்கினை கூப்பிட்ட அவமானத்தை சந்தித்துள்ளார். பொதுவாக எல்லா மேடைகளிலுமே மிஸ்கின் இவ்வாறு சிலரை அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஆனால் உதயநிதி ஸ்டாலினை மட்டும் மிஷ்கின் அவன், இவன் என்று ஒருமையில் பேசியது கிடையாது. அவரிடம் மட்டும் இருக்கும் இந்த மரியாதை மற்ற நடிகர்களுக்கு மிஷ்கின் ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மிஸ்கின் பேச்சுக்கு விஜய் ஆண்டனி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Also Read : தியேட்டரில் பதற வைத்த 8 பேய் படங்கள்.. உச்சகட்ட பயத்தை காட்டிய மிஸ்கின்

Trending News