சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

விஜய் படங்களை மட்டும் விரும்பும் இயக்குனர்.. வெறித்தனமாக மாறிய மாரி செல்வராஜ்

தன் தனிப்பட்ட முயற்சியால் கருத்துள்ள படங்களை இயக்கி, வெற்றி கண்டு வருகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். அந்த வகையில் தற்போது அவர் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது இவர் ஒரு காலகட்டத்தில் விஜய்யின் வெறித்தனமான ரசிகனாய் இருந்தேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்கத்தில் 2018ல் வெளிவந்த பரியேறும் பெருமாள் மக்கள் போற்றும் படமாக அமைந்தது.

Also Read: விஜய் பாணியில் ஷாருக்கான் செய்த விஷயம்.. ஜவான் படத்தை பற்றி அவரே சொன்ன அப்டேட்

அதன் பின்னர் 2021ல் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்றது. மேலும் இப்படத்தின் கருத்துள்ள கதை அமைப்பு மக்கள் இடையே நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. இவ்வாறு சினிமா பயணத்தை மேற்கொண்ட இவர் ஒரு காலகட்டத்தில் விஜய்யின் தீவிர ரசிகன் என பெருமைபட்டு கொள்கிறார்.

மேலும் இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு விஜய் படம் மட்டும்தான் பார்ப்பாராம். அதை தவிர்த்து ரஜினி படங்கள் சில பார்த்திருக்கிறாராம். என்னதான் நல்ல படங்கள் வந்திருந்தாலும் அதில் ஈடுபாடு செலுத்தாமல் விஜய்யின் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறார்.

Also Read: கமலின் வீட்டு வாசலிலேயே காத்துக் கிடந்த சூப்பர் ஸ்டார்.. உண்மையை உடைத்த வாரிசு

அதைத்தொடர்ந்து அவர் சொந்த ஊரில் விஜய் ரசிகர் மன்றம் ஒன்றை அமைத்து அதற்கு தலைவனாகவும் பொறுப்பேற்றுள்ளார். மேலும் விஜய்யை பற்றி யார் தவறாக விமர்சித்தாலும் அதை பொறுத்துக் கொள்ள முடியாத வெறித்தனமான ரசிகனாவும் இருந்துள்ளார். இவ்வாறு இருந்த இவர் சினிமாவிற்கு இயக்குனராக மாறிய பின்பு தான் மற்ற நடிகர்களின் படங்களை பார்த்திருக்கிறார்.

அந்த அளவிற்கு இவரிடம் இருந்த வெறி தற்போது குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து விஜய்யை வைத்து படம் ஒன்று இயக்க வேண்டும் என்ற ஆசையும் அவரிடையே இருந்து வருகிறது. விரைவில் அவருடைய இந்த ஆசை நிறைவேறும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also Read: எங்கு சென்றாலும் துரத்தும் சிவகார்த்திகேயன்.. தனுஷை ஒரு கை பார்க்க பெரிய ஹீரோவின் வாழ்த்து

Trending News