சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

திரிவிக்ரமுக்கு முன் விஜய் கூப்பிட்ட இயக்குனர்.. இரண்டு படங்கள் முக்கியம்னு தூக்கி எறிந்த டைரக்டர்

The director who rejected the film Thalapathy 69: சினிமாவில் பிரபலமாக இருந்தால் அரசியலில் ஜெயித்து விடலாம் என்று பலரும் குருட்டு நம்பிக்கையில் வருகிறார்கள். இதில் வெற்றி பெற்றவர்களை விட தோல்வியை சந்தித்து, இருக்கும் இடம் தெரியாமல் போனவர்கள் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது. ஆனாலும் இப்பொழுது விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு ஒவ்வொருவருடைய எண்ணமும் ஒரு முறை வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போமே.

புதுசாக என்ன மாற்றத்தை கொண்டு வரப் போகிறார் என்பதை பார்க்கலாம் என விஜய்க்கு பலரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் விஜய் அவருடைய கட்சியின் பெயரை அறிவித்து அரசியலுக்கு அடிக்கல் நாட்டி விட்டார். இதற்கிடையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

அதன் பிறகு சட்டமன்றத் தேர்தல் எலக்சனுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருப்பதால் அதற்குள் இன்னொரு படத்தையும் பண்ணிவிடலாம் என்று முடிவு எடுத்து விட்டார். அதே மாதிரி விஜய் நடிக்கப் போகும் அவருடைய 69 ஆவது படம் அரசியல் சார்ந்த படமாகவும், அதன் மூலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தகுந்த கதையுடன் இருக்கும் இயக்குனரை விஜய் தேடி வந்தார்.

Also read: கூடா நட்பால் சீரழிந்த இளம் இயக்குனர்.. தேடி போய் படம் பண்ணி தூக்கி விட்ட அருண் விஜய்

இவரை வைத்து எடுப்பதற்கு பல இயக்குனர்கள் லைனில் இருந்தாலும், விஜய் தனிப்பட்ட முறையில் கூப்பிட்டு கதை கேட்க ஆசைப்பட்டது வெற்றிமாறினிடம். ஆனால் அவரோ தற்போது பிஸியாக விடுதலை 2 படப்பிடிப்பில் மிகவும் மும்மரமாக போய்க் கொண்டிருக்கிறார். இதை முடித்துவிட்டு சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தையும் எடுக்க வேண்டும் என்று விஜய்யிடம் கட்டன் ரைட்டாக சொல்லிவிட்டார்.

அதன் பிறகு தான் விஜய், வெற்றிமாறன் இப்போதைக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று முடிவெடுத்து தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரமிடம் கதை கேட்டு ஓகே பண்ணி விட்டார். இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து கடைசியாக குண்டூர் காரம் படத்தை எடுத்து வெற்றியாக கொடுத்திருக்கிறார். அதன்படி விஜய்க்கு ஏற்ற மாதிரி கதையும் தயார் பண்ணி வைத்திருப்பதால் கோட் படத்தை முடித்துவிட்டு விஜய் அவருடைய 69 வது படத்தை இவருடன் இணையப் போகிறார்.

அந்த வகையில் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் தெலுங்கு டைரக்டர் படம் எடுத்தால் தமிழ் மக்களுக்கு ஒத்துப் போகுமா என்றும் மிகப்பெரிய குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். எது எப்படியோ வருகிற இரண்டு படமுமே கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விஜய் பயணித்து வருகிறார்.

Also read: கடைசி படம் மரண அடியா இருக்கணும்.. தளபதி 69-க்காக எட்டு இயக்குனர்களை வடிகட்டும் விஜய்

Trending News