தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து வந்த நெப்போலியன் இப்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கும் நெப்போலியன் அங்கு ஹாலிவுட் திரைப்படங்களிலும் அசத்தி வருகிறார். இருப்பினும் தமிழ் சினிமாவையும் அவர் மறக்கவில்லை.
கடைசியாக சுல்தான், அன்பறிவு ஆகிய திரைப்படங்களில் நடித்த இவர் இப்போது இரண்டு ஆங்கில திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சினிமாவில் இவருடைய கதாபாத்திரம் கரடு முரடாக இருந்தாலும் நிஜ வாழ்வில் நெப்போலியன் மிகவும் தங்கமான மனிதர். அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை கூறலாம்.
Also read : அமெரிக்காவில் பிரம்மாண்டமாக வாழும் நெப்போலியன்.. தியேட்டர், பார், லிஃப்ட் என மிரள வைக்கும் புகைப்படங்கள்
கடந்த 2006 ஆம் ஆண்டு ஹரியின் இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சரத்குமார், நயன்தாரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாராவின் முதல் தமிழ் திரைப்படமும் அதுதான்.
ஒருமுறை அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹரி டெக்னீசியர்களிடம் மிகவும் கடுமையாக பேசியிருக்கிறார். பொதுவாகவே ஹரி வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் டென்ஷனோடு தான் இருப்பாராம். குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்ற வேகத்தில் அவர் வேலை செய்பவர்களிடம் கோபமாக பேசுவதுண்டு.
Also read : நடிப்பு அவசியம் இல்ல, பிசினஸில் கல்லா கட்டும் 5 நடிகர்கள்.. கெஞ்சி கூப்பிட்டும் வராத நெப்போலியன்
அப்படித்தான் அந்த சூட்டிங் ஸ்பாட்டிலும் அவர் மைக்கை கையில் வைத்துக்கொண்டு டெக்னீசியன்களை கெட்ட வார்த்தையில் திட்டி இருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ந்து போன நெப்போலியன் ஹரியை கூப்பிட்டு எதற்காக இவ்வளவு டென்ஷன் ஆகி இப்படி திட்டுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதன் பிறகு அவர் அந்த மைக்கை வாங்கி அங்கே இருப்பவர்களிடம் டைரக்டரை டென்ஷன் செய்ய வேண்டாம்.
அவர் மெதுவாக கூறும் போதே அனைத்தையும் செய்து விடுங்கள். நான் செட்டில் இருக்கும் வரை யாரும் அவருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று தன்மையாக சொல்லி இருக்கிறார். அதைக் கேட்டு அனைவரும் ஒரு சேர சரி என்று கூறியிருக்கிறார்கள். அதன் பிறகு நெப்போலியன் ஹரியிடம் இப்படி மெதுவாக கூறினாலே எல்லோரும் கேட்டுக் கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார். சினிமாவில் தான் இவர் கொடூர வில்லன். நிஜ வாழ்க்கையில் அவர் ரொம்பவும் சாதுவான மனிதர் என்பதற்கு இந்த ஒரு விஷயமே சாட்சியாக இருக்கிறது.
Also read : உயரத்தில் மட்டுமல்ல உள்ளத்திலும் உயர்ந்தவர்.. பழசை மறக்காமல் இன்று வரை நெப்போலியன் செய்யும் வேலை