சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

நல்ல படம் எடுத்தும் கிடைக்காத அங்கீகாரம்.. கமலால் ஒரு வருஷம் வீட்டிலேயே முடங்கி கிடந்த இயக்குனர்

Kamal Movie Director: உயிரோட இருக்கும் போது சிலரின் அருமை தெரியாது. அது திரைக்காவியங்களுக்கும் பொருந்தும். பொதுவாக சில படங்கள் ஆடியன்ஸ் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும். ஆனால் அப்படிப்பட்ட தரமான படைப்புகளுக்கு விமர்சன ரீதியாக பாராட்டு கிடைத்தாலும் கமர்சியல் ரீதியாக வெற்றி கிடைக்காது.

இப்படி எத்தனையோ படங்கள் இருக்கிறது. அதில் கமலுடைய படங்களை எடுத்துக் கொண்டால் ஆளவந்தான், ஹேராம் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். அப்படிப்பட்ட ஒரு படம் தான் அன்பே சிவம். சுந்தர் சி இயக்கத்தில் கமல் இதற்கு கதை எழுதி இருப்பார்.

கே முரளிதரன், வி சுவாமிநாதன், ஜி வேணுகோபால் ஆகியோர் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருப்பார். இப்படத்தில் கமலின் நடிப்பை சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது. காட்சிக்கு காட்சி அவர் காட்டிய முக பாவனையும், உடல் மொழியும் இப்படி ஒரு நடிகனா என வியக்க வைக்கும்.

Also read: கமலுக்கு டாட்டா போட்ட மணிரத்தினம்.. கும்பிடு போட்டு அமெரிக்காவிலிருந்து பறந்த ஆண்டவர்

அதேபோல் உங்க பொழப்ப நான் கெடுக்க மாட்டேன், அந்த மனசு தான் சார் கடவுள் போன்ற வசனங்களும், பாடல்களும் வேற லெவலில் இருக்கும். படம் பார்த்த ஆடியன்சின் மனதை கனக்க வைத்த இந்த படைப்பு வெளிவந்த காலகட்டத்தில் கமர்சியல் ரீதியாக வெற்றி பெறாதது தான் சோகம்.

அதிலும் சுந்தர் சி இப்படத்தை ரசித்து ரசித்து எடுத்தாராம். ஆனால் இதன் அருமை தெரியாமல் போன காரணத்தினாலேயே அவர் சில நஷ்டங்களையும் சந்தித்திருக்கிறார். அதாவது இப்படத்தின் தோல்வியால் கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை அவர் வீட்டிலேயே வேலை இல்லாமல் முடங்கும் நிலையில் இருந்திருக்கிறார்.

அதன் பிறகு ஒரு கமர்சியல் வெற்றி கொடுத்தால் தான் தன்னை சுற்றி உள்ளவர்களும் வாழ முடியும் என கிரி படத்தை எடுத்தாராம். அப்படம் தாறுமாறு வெற்றி பெற்றதில் சுந்தர் சி-க்கும் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது. இதை அவரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also read: 2 படத்தோட காணாமல் போன ஹீரோயின்.. இந்த நடிகை தான் நடிக்கணும்னு வச்சு செஞ்ச கமல்

மேலும் அன்பே சிவம் வெளிவந்த போது கொண்டாடாதவர்கள் இப்போது ஆஹா ஓஹோ என்று சொல்வதைப் பார்த்தால் கோபமாக தான் வருகிறது. ஒருவேளை அப்படம் கமர்சியல் ரீதியாக வெற்றி பெற்று இருந்தால் நான் அதே போன்று பத்து படங்களை பண்ணியிருப்பேன். அதில் மூன்று படங்கள் கமல் சாரின் படங்களாக இருந்திருக்கும் என ஆதங்கத்தோடு குறிப்பிட்டு இருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News