புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Vishal : துப்பறிவாளன் 2-க்கு பிறகு வெறித்தனமாக இணையும் வெற்றி கூட்டணி.. விஷால் போட்ட மாஸ்டர் பிளான் வொர்க் அவுட் ஆகுமா?

விஷால் இப்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நேர்மையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் மூலம் சண்டக்கோழி, தாமிரபரணி போன்ற படங்களில் உள்ள விஷால் மீண்டும் வந்திருக்கிறார்.

கடந்த சில வருடங்களாக விஷால் படங்கள் தோல்வியுற்ற நிலையில் ரத்னம் படம் உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மிஸ்கின் மற்றும் விஷால் கூட்டணியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் தான் துப்பறிவாளன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவது உறுதியானது ‌

ஆனால் விஷால் மற்றும் மிஷ்கின் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் இப்படத்தை தனியாக இயக்குவதாக விஷால் கூறியிருந்தார். இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்திற்குப் பிறகு விஷாலின் அடுத்த பட அப்டேட் வெளியாகியிருக்கிறது.

மீண்டும் இணையும் மருது கூட்டணி

கிராமப்புற படங்கள் என்றால் பின்னி பெடல் எடுக்கக் கூடியவர் தான் முத்தையா. கொம்பன், விருமன் போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டிருக்கிறார். அதோடு ஏற்கனவே விஷாலுடன் இணைந்து மருது என்ற படத்தையும் கொடுத்திருக்கிறார்.

இப்போது மீண்டும் இதே கூட்டணி இணைய இருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் கிராமத்து சாயலில் தான் எடுக்கப்பட போகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்.

இப்போது இயக்குனர் முத்தையா தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக அறிமுகப்படுத்தி இருக்கிறார். இப்படம் பள்ளிப்பருவ காதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு அடுத்ததாக விஷால் படத்தை முத்தையா இயக்க உள்ளார்.

விஷால் இந்தப் படத்தின் மூலம் கண்டிப்பாக மீண்டும் தரமான கம்பேக் கொடுக்கலாம் என்று திட்டம் வைத்துள்ளார். விஷாலின் மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending News