திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உதயநிதிக்கு சினிமா ஆசையை தூண்டிவிட்ட இயக்குனர் .. சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத கடைசி படம்

உதயநிதி ஸ்டாலின் கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக தன்னுடைய கலை பயணத்தை தொடங்கினார். ரெட் ஜெயன்ட் சினிமா நிறுவனத்தின் மூலம் பல முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரித்து வழங்கி வந்தார். அதன் பின்னர் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.

அதன்பின்னர் நண்பேண்டா, இது கதிர்வேலன் காதல் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். உதயநிதி ஸ்டாலினின் சிறந்த நடிப்பிற்கு உதாரணமாக மனிதன் மற்றும் சைக்கோ திரைப்படங்களை சொல்லலாம். அரசியல் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் இவர் முழுக்க முழுக்க சினிமாவில் தான் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். இதற்கு இடையில் சட்டசபை தேர்தலிலும் நின்றார்.

Also Read:சோடாபுட்டி கண்ணாடி, புடைத்த நெஞ்செலும்பு.. உதயநிதி ஸ்டாலின் தான் என நம்பமுடியாத இளவயது புகைப்படம்

சட்டசபை தேர்தலில் எம்எல்ஏ ஆன பின்னும் உதயநிதி நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார். கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் ஒப்பந்தமானார் உதயநிதி. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக சட்டசபையின் விளையாட்டு துறை அமைச்சர் ஆனார்.

அமைச்சரான பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் இவர். மாமன்னன் திரைப்படம் தான் தன்னுடைய கடைசி திரைப்படம் என்றும் சொல்லி இருந்தார். அதற்கு அடுத்த இவரது பேட்டியில் மாரி செல்வராஜுடன் பணி புரிவது என்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும் இந்த படத்திற்கு பிறகும் அவருடன் பணிபுரிய வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

Also Read:கர்ணன் படத்தில் இவ்வளவு பெரிய தப்பு இருக்கு.. ஆட்சிக்கு ஆப்பு வைக்கும் பதிவை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்

உதயநிதிக்கு சினிமாவில் நல்ல படங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பது அவர் சொல்வதில் இருந்து நன்றாக தெரிகிறது. இதனால் சரியான வாய்ப்பு கிடைத்தால் இவர் மீண்டும் சினிமாவுக்கு திரும்பவும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் மாமன்னன் படத்தில் சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் இருப்பதாகவும், அது படம் ரிலீஸ் ஆன பின்பு அனைவருக்கும் தெரியும் என்றும் சொல்லி இருக்கிறார்.

தற்போது அமைச்சராக இருக்கும் பட்சத்தில் இது போன்ற சர்ச்சைக்குரிய படங்களில் நடிப்பது என்பது அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு எந்த விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. இருந்தாலும் மாமன்னன் திரைப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் உதயநிதியுடன் வடிவேலு மற்றும் பகத் பாசில் நடித்திருக்கின்றனர்.

Also Read:உதயநிதி ஸ்டாலின் ஹீரோவானதற்கு காரணம் இதுதான்.. நட்சத்திர ஹோட்டலில் நடந்த அவமானம்

Trending News