வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

போனா போகுதே என்று வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள்.. மார்க்கெட் உயர்ந்ததும் போடும் ஆட்டம்

இயக்குனர் ஒருவர் ஆரம்பத்தில் இயக்கிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதன் பின்பு அவருடைய படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது. இதனால் படத்தை தயாரிக்கலாம் என்ற முடிவில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அந்த படங்களும் அடுத்தடுத்து தோல்வியை தழுவி கடனுக்கு தள்ளப்பட்டார்.

எப்படியாவது கடனை அடைக்க வேண்டுமே என்று நடிகராக வாய்ப்பு கேட்க ஆரம்பித்தார். அதேபோல் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதைத்தொடர்ந்து வில்லன், குணச்சித்திரம் போன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது.

Also Read : திருமண தேவைக்காக வாய்ப்பு கேட்ட நடிகை.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு 15 நாள் கால்ஷூட் கேட்ட 70 வயசு கிழவன்

இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவரின் மார்க்கெட் உயர தொடங்கியது. ஒருவழியாக தான் பட்ட கடனை எல்லாம் அடைத்து விட்டார். ஆனால் இப்போது தயாரிப்பாளர்களுக்கு அவர் செக் வைத்துள்ளார். அதாவது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளாராம்.

ஆரம்பத்தில் கடன் உள்ளதாக நையம் பாடி வாய்ப்பு கேட்டதால் போனா போகுதே என்று படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு இப்போது தயாரிப்பாளர்களை பாடாய்படுத்தி வருகிறார். அதாவது சம்பளம் மொத்தத்தையும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே கொடுத்து விட வேண்டும் என கரராக பேசி வருகிறாராம்.

தயாரிப்பாளர்களும் இவர் நடித்தால் படம் வெற்றி அடைகிறது என்று வேறு வழியில்லாமல் அவரின் பேச்சுக்கு இணங்க நடந்து வருகிறார்கள். இவ்வாறு அந்த நடிகர் மார்க்கெட் உயர்ந்ததும் போடும் ஆட்டத்தை பார்த்து கோலிவுட் சினிமாவே வாயை பிளந்து உள்ளதாம்.

Also Read : ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

Trending News