Allu Arjun: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் புஷ்பா 2 சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த தரிசனத்திற்காக காத்திருந்த ரசிகர்கள் இப்போது அதை கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் முதல் நாளிலேயே இப்படம் 294 கோடி வசூலித்தது. அதுமட்டுமின்றி அடுத்தடுத்த நாட்களிலும் இதன் வசூல் ஏறுமுகமாக உள்ளது.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தின் தமிழ் டப்பிங்கை பார்த்து வியந்து விட்டாராம். இப்படத்திற்கு அவருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் சேகர் என்ற டப்பிங் ஆர்டிஸ்ட்.
அல்லு அர்ஜுனை மிரட்டிய டப்பிங் ஆர்டிஸ்ட்
அவர் இப்போது சோசியல் மீடியா சேனலுக்கு பேட்டி கொடுப்பதில் பிஸியாக இருக்கிறார். அப்போது அவர் பேசி காட்டும் அந்த மாடுலேஷன் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.
அதே போல் தமிழ் வெர்ஷன் வசனகர்த்தா மதன் கார்க்கி இதற்காக சில மாதங்கள் உழைத்துள்ளார். அதை அடுத்து டப்பிங் காட்சிகள் சிலவற்றை அவர் அல்லு அர்ஜுனுக்கு அனுப்பி இருக்கிறார்.
அதைப் பார்த்து மெர்சலானா அவர் இந்த மாடுலேஷன் நல்லா இருக்கே. இனி தெலுங்கு படத்துல கூட நான் இதை ஃபாலோ பண்ண போறேன் என பாராட்டி இருக்கிறார்.
அது மட்டும் இன்றி டப்பிங் கலைஞர் சேகரை அவர் விரைவில் சந்திக்கும் முடிவிலும் இருக்கிறாராம். இப்படியாக புஷ்பராஜை இம்ப்ரஸ் செய்திருக்கிறார் சேகர்.