புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஈஸ்வரி புலம்பியதால் இனியாவை தாக்கிய மொத்த குடும்பம்.. ஆவேசப்பட்ட பாக்யா, சப்போர்ட் பண்ணும் கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா பொய் சொல்லி பப்புக்கு பொய் போலீஸிடம் மாட்டிக் கொண்டார் என்று பாக்யாவிற்கு தெரிந்து விட்டது. ஆனால் அதைவிட பாக்யாவிற்கு என்ன ஒரு கொடுமை என்றால் தன் மகளை ராதிகா காப்பாற்றி தன் முகத்தில் கரியை பூசும் அளவிற்கு ஓவராக பேசிவிட்டார் என்பது தான் வேதனையாக தெரிகிறது.

இதனால் ராதிகாவிடம் எதுவும் பேச முடியாமல் வாயடைத்துப் போன பாக்கியா வீட்டிற்கு வரும் வரை இனியாவிடம் பேசாமல் வருகிறார். இடையில் செல்வி போன் பண்ணி சமையல் நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட பொழுது பாக்யா என்னால் வர முடியாது. உனக்கு தெரிந்ததை பண்ணு இல்லன்னா நீனும் அங்கிருந்து கிளம்பி விடு என்று சொல்கிறார். அதன்படி செல்வி அவர்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை வைத்து அந்த சாப்பாட்டை பண்ணி முடிக்கிறார்.

விரக்தியில் இனியா எடுக்க போகும் முடிவு

ஆனால் அது சொதப்பியதால் கடைசியில் கோபி வின்னர் ஆகி ஜெயித்து விட்டார். உடனே செல்விடம், எப்படியும் பாக்கியா தோற்றுப் போவார் என்று தெரிந்ததும் பாதிலேயே கிளம்பி விட்டாரோ என்று நக்கல் அடித்து பேசுகிறார். அதற்கு செல்வி, அக்கா அதற்காக எல்லாம் போகவில்லை ராதிகா மேடத்திடமிருந்து போன் வந்தது இனியாவிற்கு ஏதோ பிரச்சினை என்று.

அதனால் தான் பாக்கியா அக்கா கிளம்பி விட்டார் என்று செல்வி, கோபியிடம் சொல்கிறார். இதை தெரிந்ததும் கோபி இனியாவுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க ராதிகாவிற்கு ஃபோன் பண்ணி பார்க்கிறார். ஆனால் ராதிகா போன் எடுக்காததால் நேரில் போய் விசாரிக்கலாம் என்று கோபியும் அங்கிருந்து கிளம்புகிறார். இதனை தொடர்ந்து இனியா வீட்டிற்கு வந்த நிலையில் ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து இனியாவை திட்டுகிறார்கள்.

அத்துடன் ஈஸ்வரி, இப்பதான் கோர்ட்டு கேஸ் என்று எல்லாம் முடிந்து இருக்கும் பட்சத்தில் நீ வேற புதுசாக ஒரு பிரச்சினைக்கு போய்விட்டாய். உங்க அம்மா உன்னை அனுப்பாமல் இருக்கும் பொழுது உன்மேல் நம்பிக்கை வைத்து நான் தான் பர்மிஷன் வாங்கி கொடுத்தேன். அதற்கு தகுந்த மாதிரி நீ ஏன் நடக்கவில்லை என்று இனியாவை திட்டுகிறார்.

இனியாவை எல்லாரும் திட்டும் பொழுது பாக்கியா எதுவும் சொல்லாமல் மாடியில் இருக்கும் அவருடைய ரூமுக்கு போய் தனியாக இருந்து அழுகிறார். அத்துடன் ராதிகா பேசியதையும் நினைத்து ரொம்ப வேதனைப்படுகிறார். பிறகு கீழே வந்த பாக்யா, இனியாவை திட்டி அடித்து மொத்த ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக ஆவேசமாக நடந்து கொள்கிறார்.

இப்படி எல்லாரும் சேர்ந்து திட்டியதால் இனியா விபரீதமாக முடிவு எடுக்கப் போகிறார். ஆனால் இனியா மீது எந்த தவறும் இருக்காது நான் சப்போர்ட்டாக இருக்கிறேன் என்று கோபி, இனியாவுக்கு ஆறுதலாக இருப்பார். இருந்தாலும் இனியா, தன்னாலதான ஒட்டுமொத்த குடும்பமும் கஷ்டப்படுகிறார்கள். நான் இருக்க மாட்டேன் என்று தற்கொலைக்கு முயற்சி பண்ண போகிறார். ஆனால் எதுவும் நடக்காத படி பாக்கியா காப்பாற்றி விடுவார்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News