செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தனுஷ் படத்தோடு முடிந்த சகாப்தம்.. வாய்ப்புக்காக கணவரை தூது விட்ட நடிகை

தென்னிந்திய நடிகைகள் திருமணமானாலும் தங்களுடைய அழகும், இளமையும் குறையாத காரணத்தால் தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து தான் வருகிறார்கள். அதிலும் சில நடிகைகள் கதாநாயகிகளாகவே தொடர்ச்சியாக படங்களில் நடித்து தங்களது மார்க்கெட்டை விடாமல் கைப்பற்றி வருகின்றனர். மேலும் சில நடிகைகள் விளம்பரங்கள், மாடலிங், பிஸ்னஸ் என களமிறங்கி விடுவார்கள்.

அப்படிப்பட்ட திருமணமான நடிகை ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக மார்க்கெட்டில்லாமல் தவித்து வருகிறார். இவர் சிரித்தால் போதும் தமிழ்நாடே மயங்கிவிடும். அந்த அளவிற்கு கொள்ளை அழகுடன், குடும்ப பெண்ணாக உலா வருவார். அஜித், விஜய், பிரஷாந்த், கமலஹாசன் என எல்லா உச்ச நடிகர்களுடனும் நடித்து ஒரு ரவுண்டு வந்தார். மேலும் பல கிசுகிசுக்களில் சிக்கிய போதிலும் தமிழ்,தெலுங்கு என தனது மார்க்கெட்டை ஒருபோதும் இழக்கவில்லை.

Also Read:அடுத்தடுத்து தனுஷ், விஜய்யை லாக் செய்த மாறன் பேமிலி .. மாஸ்டர் பிளானில் வெளிவரும் படங்கள்

தற்போது திருமணமாகி இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த போதிலும் அழகையும், இளமையயும் அப்படியே மெயின்டைன் செய்து வருகிறார். அவ்வப்போது இவர் சமூக வலைதளத்தில் கலர் கலரான ஆடைகளை அணிந்துக்கொண்டு அப்லோடு செய்யும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லட்சகணக்கான லைக்ஸ்களை போட்டுச் செல்வர்.

இந்நிலையில் இவர் கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். 2020 ஆம் ஆண்டு வெளியான பட்டாசு படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்த இப்படத்தில், அடிமுறை என்ற பழங்கால சண்டையின் முக்கியத்துவத்தை வைத்து படத்தின் கதை நகரும்.

Also Read: களத்தில் இறங்கிய கொக்கி குமார்.. செல்வராகவனின் தந்திரத்தில் மாட்டிக் கொண்ட தனுஷ்

அப்பா தனுஷை, கொலை செய்த வில்லனை மகன் தனுஷ் பலி வாங்கும் பழைய கதைக்களத்தில் இப்படம் இருந்ததால் பெரும் தோல்வியுற்றது. இப்படத்தில் அப்பா தனுஷிற்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை சினேகா. இப்படத்தில் இவரது ஆக்ஷன் கலந்த நடிப்பு பெரிதும் பேசப்பட்ட நிலையில், படம் ரிலீசான தருவாயில் சினேகா இரண்டாவது பெண் பிள்ளையை பெற்றெடுத்தார்.

அத்துடன் சினேகா தற்போது தனியார் தொலைக்காட்சிகளில் நடைபெறும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக வலம் வருவது, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனது கணவரும், நடிகருமான பிரசன்னாவிடம் கூறி மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அவரும் சிநேகாவிற்கு பட வாய்ப்புகளை வாங்கிக் கொடுக்க தனது நெருங்கிய சினிமா வட்டார நண்பர்களிடம் அணுகி வருகிறாராம்.

Also Read: சினேகா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள்.. அடையாளப்படுத்திய செல்வராகவனின் புதுப்பேட்டை

Trending News