வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அட்லீக்கு டிமிக்கி கொடுத்த விஜய்.. ரிஸ்க் எடுக்க வேண்டாம் என எஸ்கேப் ஆன தளபதி

Actor Vijay and Atlee: விஜய் மற்றும் அட்லீ இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும், உடன்பிறவாத அண்ணன் தம்பிகளாகவும் தமிழ் சினிமாவில் ஒன்றோடு ஒன்றாக ஒட்டி வந்தார்கள். இதனை தொடர்ந்து இவருடைய அடுத்த படமும் விஜய்யை வைத்து தான் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.

அங்கே சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இப்படத்தை ஷாருக்கான் அவருடைய தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் மூலம் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

Also read: உனக்கு என்னடா உங்க அப்பா ஹீரோ, நீ இயக்குனர் கலெக்ஷன் அள்ளிடலாம்.. எஸ்ஏசி-க்கு மறுப்பு தெரிவித்த விஜய்யின் வாரிசு

மேலும் இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இதில் விஜய்யும் நடிக்கிறார் என்ற பேச்சுக்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இது உண்மையாக இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கு காரணம் அட்லீ மற்றும் ஷாருக்கான் இவர்கள் இருவருமே விஜய்யின் நெருக்கத்தில் இருப்பவர்கள்.

இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்திற்கான ஆடியோ லான்ச் வருகிற 30-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. ஆனால் இதற்கான வேலைகள் தற்போது மும்மரமாக நடைபெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்வார் என்று அட்லீ முழுவதுமாக நம்பி இருந்தார்.

Also read: அஜித், விஜய்யிடம் தோற்றுப் போய் நிற்கும் ரஜினி.. இதுல அடுத்த படம் வேற என்ன நிலைமை ஆகப்போகுதோ?

ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி விஜய் இவருக்கு டிமிக்கி கொடுத்து விட்டார். அதாவது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்திற்கான வேலைகளில் பிஸியாக இருப்பதால் ஜவான் ஆடியோ லாஞ்சில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை. இந்தப் படத்திற்கான வேலைகளில் முழுவதுமாக இறங்கி விட்டதால், இந்த நேரத்தில் வேறு எந்த ரிஸ்க்கும் எடுக்க தேவையில்லை என்று எஸ்கேப் ஆகிவிட்டார்.

அத்துடன் ஜவான் ஆடியோ லான்ச்க்கு போனால் தேவையில்லாமல் மேடையில் ஏதாவது பேச வேண்டிய சூழ்நிலை வரும். அது தற்போது லியோ படத்திற்கு தேவையில்லாத பிரச்சினையை இழுத்து விட்டு விடும் அதனால் உஷாராகி எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனால் இவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்த அட்லீக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

Also read: ரசிகர்களுக்கு தளபதி விஜய் வைத்த செக்.. புஸ்ஸி ஆனந்த் மூலம் போடப்பட்டிருக்கும் 5 முக்கிய கட்டுப்பாடுகள்

Trending News