புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குணசேகரன் சேர்த்து வைத்த மொத்த பெயரையும் டேமேஜ் செய்த எதிர்நீச்சல் டீம்.. இதுக்கு பேசாம எண்டு கார்டு போட்டிருக்கலாம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலின் கதை தற்போது தட்டு தடுமாறி போய்க் கொண்டிருக்கிறது. கடந்த ரெண்டு வருஷமாக சேர்த்து வைத்த மொத்த பெயரையும் டேமேஜ் ஆக்கி வருகிறது. அதாவது குணசேகரன் கேரக்டரில் புதிதாக கொண்டு வந்தவரை தூக்கலாக காமிக்க வேண்டும் என்பதற்காக அராஜகத்தின் மொத்த உருவமாக பேச்சிலும் செயலிலும் அடாவடித்தனத்தை காட்டி வருகிறார்.

ஆனால் இதை பார்ப்பதற்கு எரிச்சலாகவும், பிரஷர், பிபி எல்லாம் எகிறிது என்று மக்கள் தலையில் அடித்து புலம்பித் தவித்து வருகிறார்கள். இன்னும் சொல்ல போனால் இந்த நாடகத்தை பார்ப்பதற்கு பதிலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலின் கதை எவ்வளவோ பரவாயில்லை. ரொம்பவே நன்றாக இருக்கிறது என்று மக்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Also read: ஒத்தப்பன் சுடலை உக்கிரமா வந்திருக்கான்.. கலகலப்பான நடிப்பு இல்லாமல் திணறும் எதிர்நீச்சல்

அந்த வகையில் நேற்று குணசேகரன் ரொம்பவே அராஜகம் ஆகவும், பெண்களை பற்றி தவறான கருத்துக்களை சொல்லி கொடூர வில்லனாக நடந்திருக்கிறார். அதிலும் ஈஸ்வரியை அடித்த விதமும் அதற்கான காரணத்தையும் சொல்லும் பொழுது, கதிர் பின்னாடியில் இருந்து கைதட்டி ரசித்து சிரித்து நக்கலாக பார்த்த பார்வை அனைவரையும் கோபப்படுத்தும் அளவுக்கு போயிருக்கிறது.

என்னதான் குணசேகரன் கேரக்டருக்கு அவரைப் போலவே ஒருவரை கூட்டிட்டு வந்தாலும் மாரிமுத்து நடிப்புக்கு கொஞ்சம் கூட இவர் செட்டே ஆகவில்லை. அத்துடன் எதிர்நீச்சல் டீமும் ஏன் இந்த மாதிரி மோசமான வசனங்களை கொடுத்து வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. இப்படியே தொடர்ந்து போனால் மொத்தமாக எதிர்நீச்சல் சீரியலுக்கு பெரிய கும்பிடு போட வேண்டிய நிலைமை வந்துவிடும்.

Also read: டிஆர்பி-யில் பின்னி பெடலெடுக்கும் டாப் 6 சீரியல்கள்.. குணசேகரனின் பெயரை வைத்து ஆட்டம் காட்டும் எதிர்நீச்சல்

இதற்கு பேசாம குணசேகரன் கேரக்டர் இல்லாதபடியே கதையை நகர்த்திருக்கலாம் என்றும் அவர் சேர்த்து வச்சுட்டு போன பெயரை கெடுக்கும் அளவிற்கு இந்த மாதிரி ஒரு கதாபாத்திரம் தேவைதானா என்று பல கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள். இதை இப்பவே கொஞ்சம் மாற்றிக் கொண்டால் அட்லீஸ்ட் இனியாவது கொஞ்சம் நஞ்சம் இருக்கிற டிஆர்பி ரேட்டிங்கை தக்கவைத்துக் கொள்ளலாம்.

இல்லை என்றால் இந்த சீரியல் இருக்கும் இடம் தெரியாமலேயே போய்விடும் என்று மக்கள் ஆதங்கத்துடன் கமெண்ட்ஸ் பண்ணி வருகிறார்கள். மேலும் குணசேகரன் பேச்சின பேச்சிலிருந்து தெரிகிறது அவர் தொடர்ந்து நாடகத்துக்கு வருவது போல் இல்லை. அவ்வப்போது இந்த மாதிரி அதட்டி உருட்டி போவார். இடைப்பட்ட காலத்தில் கதிர் மற்றும் ஞானத்தை வைத்து கதை நகர வாய்ப்பிருக்கிறது. ஆக மொத்தத்தில் நல்லா இருந்த சீரியல் தற்போது கரையேற்ற முடியாமல் தவித்து வருகிறது.

Also read: குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமான ஆளு கிடைக்கலை.. புது ட்விஸ்ட் உடன் வரப்போகும் எதிர்நீச்சல் சீரியல்

Trending News