புதன்கிழமை, ஜனவரி 22, 2025

குணசேகரனை விட டபுள் மடங்கு எகிறும் ரோஷம் கெட்ட மருமகள்.. சரியான மானங்கெட்ட குடும்பமா இருக்கும் போல

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், இத்தனை நாளாக குணசேகரன் கொடூரமாகவும், ஆணாதிக்கத்துடனும் திமிராக வீட்டில் இருந்ததால் தான் அந்த வீட்டில் உள்ள மருமகள்கள் ஒற்றுமையாக இருந்திருக்கிறார்கள் போல. அதுவும் அதற்கேற்ற மாதிரி அவர்களுடைய புருஷன்களின் ஆதரவும் கிடைக்காததால் தான் ஒற்றுமையாக நடித்து இருந்திருக்கிறார்கள்.

இப்பொழுது தான் இவர்களுடைய குட்டு வெளிப்பட்டிருக்கிறது. அதாவது ரேணுகா மற்றும் நந்தினியின் கணவன்கள் தற்போது திருந்தி மொத்தமாக மனைவி பேச்சை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் சந்தோஷத்தில் இன்னும் இதற்கு ஏற்ற மாதிரி கதை நகர்ந்து வரும் என்று எதிர்பார்த்தால் மொத்தமும் தலைகீழாக மாறிவிட்டது. அதாவது ரேணுகாவின் அம்மா வியாபாரம் பண்ண சொல்லி 15 லட்ச ரூபாயை ஞானத்திடம் கொடுத்தார்.

தற்போது ரேணுகாவை பொருத்தவரை கையில் பணமும் இருக்கிறது, கணவனும் தன் பக்கம் இருக்கிறார் என்ற மெதப்பில் ஓவராக எகிறி வருகிறார். சாதாரணமா ஒரு விஷயத்தை கூட பேசி பெருசாகி நந்தினியை வம்பு இழுத்து நோகடிக்கிறார். இதற்கு குணசேகரனே பரவாயில்லை என்பதற்கு ஏற்ப ரேணுகாவால் குடும்பம் ரெண்டாகி பிரியப் போகிறது.

Also read: முத்துவின் 2 லட்ச ரூபாய் கனவை சுக்குநூறாக உடைக்க போகும் மச்சான்.. தனக்குத்தானே சூனியம் வைத்த விஜயா

இதுவரை ரோசம் கெட்டு இருந்த ஒவ்வொருவரும் இப்போதுதான் புதுசா மானம், சூடு, சொரணை எல்லாம் அதிகரித்திருக்கிறது போல. அதே நேரத்தில் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதற்கு இருப்பை இவர்களுடைய சண்டை அங்கு இருக்கும் ஜனனின் அப்பத்தாவிற்கு குதூகலமாக இருக்கிறது. போற போக்குல ரேணுகா மற்றும் நந்தினிக்கு சண்டையை மூட்டி அதில் குளிர்காகிறார்.

இதைவிட மிகப்பெரிய கேவலம் குணசேகரன், இவர்களெல்லாம் யாரு என்ற நினைப்பு கூட இல்லாமல் போலீஸ் ஸ்டேஷனில் நல்ல அடிச்சு துவைக்க சொன்னாரு. அந்த வலியெல்லாம் மறந்து போயி இப்பொழுது குணசேகரன் சொன்னதும் மறுபடியும் சமையல் சாப்பாடு என்று வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் பொழுது சரியான மானங்கெட்ட குடும்பமாக இருக்கும் போல என்று சொல்லத் தோணுகிறது.

கடைசியில் தர்ஷினி மற்றும் ஈஸ்வரி வீட்டிற்கு வரும் பொழுது குடும்பமே இரண்டாகப் பிரிந்து இருக்கும் போல அந்த அளவிற்கு தான் கதை மாறப்போகிறது. அத்துடன் ஞானம் புது பிசினஸ் ஆரம்பிக்கும் விதமாக அகல காலை வைத்து அடிபட போகிறார் என்பதும் தெரிகிறது. அப்படி இருந்தால் மட்டும்தான் ரேணுகா மற்றும் ஞானத்திற்கு புத்தி தெளியும்.

Also read: முத்து மூலம் மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்.. மனோஜ்க்கு தெரிய வந்த ரோகினியின் லீலைகள், இதுக்கே இப்படியா!

Trending News