Singapenne: சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த தருணம் வந்துவிட்டது. காந்தி மற்றும் அன்பு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அவர்களுடைய காதல் ஜெயிக்க வேண்டும் என அந்த சீரியல் பார்க்கும் ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நந்தா போலி அழகனாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஆனந்தி அன்பு வை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கியது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இதனாலேயே சீரியல் ரசிகர்கள் கதையின் கதாநாயகியான ஆனந்தியை திட்டி தீர்த்துக் கொண்டிருந்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் ஆனந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மகேஷ் உள்ளே புகுந்ததும் இனி இந்த சீரியலே பார்க்க வேண்டாம் என விமர்சனங்கள் கூட எழுந்தது. கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பது போல் மித்ரா மகேஷின் திட்டத்திற்கு ஆப்பு வைத்து விட்டாள்.
இதனால் அன்பு தான் நினைத்த மாதிரியே குடும்பத்துடன் பீச், தீம் பார்க், துணி கடை என ஜாலியாக சுற்றுவதை பார்க்க நேற்றைய எபிசோடு கண்ணுக்கு அழகாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் ஆனந்தியோடு சேர்த்து அவளுடைய குடும்பத்திற்கும் அன்பு துணி எடுத்துக் கொடுத்திருந்தான்.
அடுத்த திருப்பத்தை நோக்கி சிங்கப்பெண்ணே
அன்பு எடுத்துக் கொடுத்த துணியை போட்டுக்கொண்டு ஆனந்தி குடும்பத்துடன் தீம் பார்க் போவது போல் நேற்றைய எபிசோடு இருந்தது. அன்பு விடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு ஆனந்தி அவனிடம் மன்னிப்பு கேட்டாள்.
எதற்காக நான் இவ்வளவு வெறுத்தும் நீங்கள் என் மீது அன்பு செய்கிறீர்கள் என்று ஆனந்தி அன்பு வை பார்த்து கேள்வி எழுப்பினால். அதற்கு அன்பு நீங்க எனக்காக வந்தவங்க என்று காதலுடன் சொல்லிய பதில் மெய்சிலிர்க்க வைத்தது.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி அன்பு மீது காதல் வயப்படுவது போல் காட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் இதில் புதிய திருப்பம் வேறு ஒன்றும் இருக்கிறது. ஆனந்தி மனதிற்குள் முகம் தெரியாத அழகனை உருகி உருகி காதலித்துக் கொண்டிருக்கிறாள்.
எனவே அன்பு மீது காதல் வயப்பட்டாலும் அதை அவள் வெளியில் சொல்லப்போவதில்லை. அன்பு தானாக முன்வந்து நான் அந்த அழகன் என்று சொன்னால் மட்டும்தான் இவர்கள் காதல் ஜெயிக்கும். இதற்கிடையில் மகேஷ் மற்றும் நித்ரா என்னென்ன திட்டங்கள் போட்டு ஆனந்தியை அலற விடப் போகிறார்கள் இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.
சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்
- அரைச்ச மாவையே அரைக்கும் சிங்கப்பெண்ணே
- அழகன், ஆனந்தி காதலுக்கு மங்களம் பாட போகும் மகேஷ்
- ஆனந்தி, அன்பு காதலுக்கு ஆப்பு வைக்கும் மகேஷ்