திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்தியன் 2 படத்திற்காக மும்பையிலிருந்து பறந்து வந்த டீம்.. சேனாதிபதிக்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கல்

பல வருடமாக கிடப்பில் போட்ட இந்தியன் 2 படத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார் ஷங்கர். தொடர்ந்து பல பிரச்சனைகள் இந்தியன் 2 படத்திற்கு வந்து கொண்டிருந்ததால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா மற்றும் ஷங்கர் இடையே ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருந்தது.

இப்போது உதயநிதி ஸ்டாலின் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு சுமுகமாக முடித்து வைத்துள்ளார். அதற்குள் ஷங்கர் ராம்சரனின் படத்தை எடுத்து வந்தார். இந்நிலையில் மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்க உள்ளதால் மாதம் 10 நாள் இந்த படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் ஷங்கர்.

Also Read : ஆட்சியை ஆட்டம் காண வைக்கும் ஷங்கர்.. இந்தியன் 2 படத்துக்கு உதயநிதி கொடுக்கும் ஓவர் டார்ச்சர்

தற்போது காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். நாளை முதல் கமலின் போஷன் படமாக்கப்பட உள்ளது. இதற்காக கமல் 22ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளாராம்.

இப்போது கமலுக்கு மேக்கப் டெஸ்ட் நடந்துள்ளதாம். இந்தியன் படத்தில் வயதான தாதாவாக சேனாதிபதி கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். அதேபோல் இப்படத்திலும் கமலின் தோற்றத்தை கொண்டுவர படக்குழு முயற்சி செய்துள்ளது.

Also Read : அஜித், விஜய், கமலுடன் ஜோடி போட்ட பிரபல நடிகை.. சூப்பர் ஸ்டாருடன் மட்டும் கிடைக்காத வாய்ப்பு

இதற்காக சிறப்பு குழு ஒன்று மும்பையில் இருந்து சென்னை வந்துள்ளனர். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு கமலஹாசனின் தோற்றத்தைப் பரிசோதனை செய்துள்ளனர். அதாவது இந்தியன் 2 படத்திற்கு கமல் மேக்கப் போட கிட்டத்தட்ட 2 மணியிலிருந்து 3 மணி நேரம் ஆகிறதாம்.

இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்கும் ஒவ்வொரு நாளும் கமலுக்கு கிட்டத்தட்ட 3 மணி நேரம் மேக்கப் போடவே செலவாகும் என கூறப்படுகிறது. இந்தச் சமயத்தில் கமல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் தற்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கமல் உள்ளாராம்.

Also Read : பிக் பாஸ் சீசன் 6 கன்ஃபார்மான 9 ஆண் போட்டியாளர்கள்.. ஆண்டவரை சந்திக்க தயாராகும் போட்டியாளர்கள்

Trending News