திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்யை விட அஜித்துக்கு ஜோடியாக நடித்ததால் வந்த புகழ்.. வீட்டிற்கு அதே பெயரை வைத்து அழகு பார்த்த நடிகை

பொதுவாக சினிமாவில் பல நடிகைகளின் கனவாக இருப்பது விஜய் அஜித்துக்கு ஜோடியாக நடித்து விட வேண்டும் என்பதுதான். ஏனென்றால் அப்பொழுது தான் அவர்களால் ஈசியாக பிரபலமாக முடியும் அத்துடன் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்க முடியும். அந்த வகையில் முக்கால்வாசி இவர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் பேரும் புகழுடன் தான் இருக்கிறார்கள்.

அப்படித்தான் இந்த நடிகையும் தவிர்க்க முடியாத ஹீரோயினாக சினிமாவிற்குள் வலம் வந்தார். அத்துடன் அஜித், விஜய், கமல் போன்ற பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடி போட்டு நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் வந்தது என்னமோ சின்ன சின்ன கேரக்டர் மூலம் தான். அதன் பின் சரத்குமார் படத்தில் ஜோடியாக நடித்து மிகவும் பரிச்சயமான நடிகையாக மாறினார்.

Also read: தளபதி 68 பட டைட்டில் இது தானா! தோனிக்காக விஜய் செய்த செயல்

இவர் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மிகவும் பேர் வாங்கி கொடுத்த படம் என்றால் அஜித் கூட நடித்த அந்த ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான். அதை அவர் மறந்து விடக்கூடாது என்பதற்காக அதே பெயரை அவருடைய வீட்டிற்கு வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட நடிகை யார் என்றால் 2000 ஆண்டுகளில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக வலம் வந்த தேவயானி தான்.

இவர் விஜய்க்கு ஜோடியாக ஃப்ரெண்ட்ஸ் மற்றும் நினைத்தேன் வந்தாய் படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் அதைவிட அஜித் கூட நடித்த காதல் கோட்டை என்ற படத்தில் கமலி என்ற கதாபாத்திரம் தான் இவருக்கு சினிமா வாழ்க்கையை புரட்டிப் போடும் அளவிற்கு திருப்புமுனையை கொடுத்திருக்கிறது.

Also read: அப்பா பைக் ரேஸ் போல ஆச்சரியப்படுத்திய அஜித்தின் மகன்.. வைரல் புகைப்படம்

அது எந்த காலத்திலும் மறந்து விடக்கூடாது என்பதற்காக இவர் வசித்து வரும் அசோக் நகர் வீட்டிற்கு கமலி என்று பெயர் சூட்டியிருக்கிறார். இவருடைய எதார்த்தமான நடிப்பும் குழந்தைத்தனமான பேச்சும், சிரிப்பும் அனைவரையும் கவர்ந்து விட்டது. இவரை கொண்டாடாத ரசிகர்கள் யாரும் கிடையாது.

அதற்கு மேலே சொன்னால் இவரை வெறுக்கக்கூடிய அளவிற்கு எந்த ஒரு நபரும் இதுவரை இல்லை. மேலும் அஜித் மற்றும் தேவயானி நடித்த காதல் கோட்டை படம் எவர்கிரீன் திரைப்படமாக எல்லோருடைய மனதிலும் ஆணித்தனமான முத்திரையை பதித்து விட்டது. இந்த படம் இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய பிரமாண்ட வெற்றியை கொடுத்திருக்கிறது.

Also read: பிரபு இடத்தை பிடித்த ஜெயராமின் 5 படங்கள்.. தேவயானி, மந்த்ராவை மயக்கிய கோபாலகிருஷ்ணன்

Trending News