2001 ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான திரைப்படம் அள்ளித்தந்த வானம். விஜி என்று இயக்குனர் இயக்கிய இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். மேலும் ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படத்தில் லைலா, நடிகர் முரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவி பிரபலம் பூர்ணிதா, ஜூலி என்ற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கமர்சியல் என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகி இருந்த இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் மேகா. பிரபல பாலிவுட் நடிகையான இவரை பிரபுதேவா தமிழில் அறிமுகம் செய்து வைத்தார்.

அந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் அதன் பிறகு அவருக்கு தமிழில் பெரிய அளவு படவாய்ப்புகள் இல்லை. தென்னிந்திய சினிமாவில் தமிழை தாண்டி கன்னட சினிமாவில் ஸ்மைல் என்ற ஒரு படம் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு மனோஜ் பாஜ்பாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் வேறு யாரும் இல்லை, சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளியாகி மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பிய தே ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸ் ஹீரோ தான்.

இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்துடன் காணாமல் போன நடிகைகள் வரிசையில் இவரும் இணைந்து விட்டார் என்பதுதான் சோகமான விஷயம்.