வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

தி பேமிலி மேன் 2 – சமந்தாவிற்கு இவ்வளவு கோடி சம்பளமா.? நயன்தாராவை தூக்கி சாப்பிட்டாங்களாம்!

சமந்தா நடிப்பில் வெளிவந்த தி பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸ் தமிழினத்திற்கு எதிரானதாக நடித்ததாக பல எதிர்ப்புகளை சந்தித்தார். அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் தொண்டு ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகளையும் வெளியிட்டனர்.

மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா போன்ற பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர். அமேசான் பிரைமில் இந்த வெப் சீரிஸ் வெளியிடப்பட்டது முதல் நாளில் இருந்தே பல பிரச்சினைகளை சந்தித்தது.

இந்த வெப் சீரிஸ் 2 சீசனாக கிட்டத்தட்ட 19 எபிசோட் ஆக வெளிவந்துள்ளது. அதில் சீசன் 2 வெப் சீரிஸ் மட்டும் 9 எபிசோடுகளில் நடிப்பதற்கு சமந்தாவிற்கு 10 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சர்ச்சையை சந்தித்தாலும் சமந்தா தமிழின மக்களின் உணர்வுகளை உள்வாங்கி தான் நடித்ததாகவும் ஈழத்தமிழர்கள் எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.

சாதரணமாக சமந்தாவிற்கு ஒரு படத்தில் நடிப்பதற்கு 1.5 முதல் 2 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கோடி கோடியாய் சம்பளம் கொடுப்பதால் வரலாறு தெரியாமல் நடித்து விட்டு தமிழ் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார் சமந்தா.

samantha-photo
samantha-photo

இப்படி கோடிகளில் கொட்டி கொடுப்பதால் காஜல் அகர்வால், தமன்னா, வாணி போஜன் போன்ற முன்னணி நடிகைகள் வெப் சீரியஸில் நடிப்பதற்கான ஆர்வத்தை செலுத்தி வருகின்றனர். நயன்தாரா வாங்கும் 7 கோடி சம்பளத்தை தாண்டி தற்போது 10 கோடி சம்பளம் வாங்கியுள்ள சமந்தாவிற்கு வெப்சீரிஸ் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Trending News