ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

தி பேமிலி மேன் 3 கதை என்ன தெரியுமா.? 2வது சீசன் பஞ்சாயத்தே இன்னும் முடியல இதுல இது வேறயா!

வெப் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை விட 3 மடங்கு அதிகமாக வெப் சீரியல் மூலம் கிடைத்து விடுகிறது. இதனால் நடிகைகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது வெளிவந்த தி பேமிலி மேன் 2 வெப் சீரியல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது இலங்கை தமிழர்களுக்காகப் போராடிய LTTE-யை தவறாக சித்தரித்ததாகவும் பல தமிழ் அமைப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் OTT திளத்தில் வெளிவந்து ரசிகர்கள் ஆதரவையும் ஒருபுறம் பெற்று தான் வருகிறது. 2வது சீசனின் கதைப்படி சமந்தா இலங்கை தமிழ் பெண்ணாக நடித்திருக்கிறார். முதல் சீசனில் ஸ்ரீகாந்த் திவாரி காஷ்மீர் தீவிரவாதத்தை முறியடிப்பது போன்ற கதை அமைந்திருக்கும்.

தற்போது இந்த இரண்டாவது சீசனில் இலங்கை போராளிகளும், பாகிஸ்தான் உளவுப் பிரிவும் இணைந்து நடக்க இருந்த சதித்திட்டத்தை முறியடித்தார். தற்போது இந்த 2ம் பாகத்தில் மொத்தம் 9 எபிசோடுகள் வெளியிடப்பட்டது.

அதில் 9வது எபிசோட்டின் இறுதிக்காட்சியில் சீனாவை சேர்ந்த ஒரு நபர் லேப்டாப்பில் தனது பாஸ் உடன் உரையாடுகிறார். அதில் நான் நாகலாந்து,அருணாச்சல பிரதேசத்தை கவர் செய்து விடுகிறேன், உங்கள் அனுமதிக்காக காத்திருக்கிறேன் என்பது போன்ற மெசேஜை அனுப்புகிறான்.

அத்துடன் 9 வது எபிசோட் முடிவடைகிறது, இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இந்தியாவை கொரோனா என்ற வைரஸ் மூலம் சீர்குலைக்க நினைக்கும் சீன அரசு அல்லது சீனாவில் உள்ள ஒரு ரகசிய அமைப்பைப் பற்றிய கதையாக இருக்கும் என்று தெரிகிறது.

the-family-man-2-cinemapettai
the-family-man-2-cinemapettai

இதனை ஸ்ரீகாந்த் திவாரி எப்படி தடுக்க போகிறார் என்பது தான் 3வது சீஸனில் கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒருபுறம் எதிர்ப்புகளை சந்தித்தாலும் 3வது சீசன் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

Trending News