வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

திரிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்த குடும்பம்.. லியோ படப்பிடிப்பில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டது. இதன் தொடர்ச்சியாக படப்பிடிப்பும் காஷ்மீரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

அங்கு குளிர் அதிகமாக இருப்பதால் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கூட படப்பிடிப்பு நடத்த முடியாத நிலையில், படத்தில் இடம்பெறும் முக்கிய காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டிருக்கிறது. அதிலும் சமீபத்தில் படத்தின் கதாநாயகி திரிஷா காஷ்மீரில் கொட்டுகிற பனியில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

Also Read: லியோ உடன் மோதிப் பார்க்கத் தயாராகும் சஞ்சய் தத்.. இணையத்தை அலறவிடும் ஜிம் புகைப்படம்

ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த திரிஷா, விஜய் குறித்து சமூக வலைதளங்களில் நிறைய கிசுகிசு பரப்பப்படுகிறது. இதனால் திரிஷா விஜய்யுடன் காஷ்மீர் சென்றது விஜய்யின் குடும்பத்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இருவருக்கும் பல கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருக்கிறது. விமானத்தில் கூட பக்கத்து பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.

அதனால் தான் திரிஷா இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் விதமாக திரும்பி வந்தார் என்று ஒரு பேச்சு போய்க்கொண்டிருக்கிறது. ஏற்கனவே லியோ படத்திருக்காக பூஜையில் கூட இருவரும் ரொமான்டிக் லுக்கு விட்ட புகைப்படம் ரசிகர்களின் கண்ணைப் பறித்தது.

Also Read: துணிவு படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்.. ஏகே 62 மூலம் லியோவுக்கு வரும் அடுத்த சிக்கல்

திரிஷாவை வெட்கத்துடன் பார்த்த விஜய்யின் புகைப்படத்தையும் ரசிகர்கள் இப்போது வரை டிரெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தான் விஜய்யின் குடும்பத்திற்கு, அவர்கள் இருவரின் இடையே ஏதாவது பழக்கம் ஏற்பட்டு விடுமோ! என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது. மறைமுகமாகவும் திரிஷாவிற்கு எச்சரிக்கை கொடுத்திருக்கின்றனர் .

ஆனால் காஷ்மீர் படப்பிடிப்பில் திரிஷாவிற்கு இப்பொழுது இங்கே வேலை இல்லை. ஸ்டண்ட் சீன்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவரை போயிட்டு வரும்படி கூறிவிட்டார் லோகேஷ் என்று கூறுகின்றனர். இந்த இரண்டு விஷயங்களில் எது உண்மை என்று தெரியவில்லை.

Also Read: 3 மடங்கு செலவை இழுத்துவிட்ட லியோ லோகேஷ்.. மொத்த லாபமும் இதுலே போயிடுமோ என பயத்தில் தயாரிப்பாளர்

Trending News