திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

உடம்பை குறைக்க முடியல, படத்திலிருந்து தூக்கிய பா ரஞ்சித்.. கபாலி பட நடிகருக்கு வந்த சிக்கல்

கடந்த 2012ஆம் ஆண்டு அட்டகத்தி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பா ரஞ்சித், அதைத்தொடர்ந்து மெட்ராஸ் படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக அடையாளம் கண்டவர். இதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கி உலக அளவில் கவனம் பெற்றவர்.

தற்சமயம் பா ரஞ்சித் விக்ரமை வைத்து ‘சியான் 61’  படத்தை இயக்க இருக்கிறார். ஆனால் இதற்கு முன்னரே அவர் ஒரு படத்தை முடித்து ரிலீஸ்காக காத்துக் கொண்டிருக்கிறார். அதாவது சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி முடித்த படம்தான் ‘நட்சத்திரம் இருக்கிறது’.

நட்சத்திரம் நகர்கிறது படத்தை பா ரஞ்சித் ஏற்கனவே முடித்து விட்டார். இந்த படத்தின் ஹீரோ காளிதாஸ் ஜெயராம். இந்த படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் படமாம். ஆகையால் அந்தப் படத்திற்கு இரண்டாவது ஹீரோவிற்கு பல முகங்களை தேடி இருக்கிறார் பா ரஞ்சித்.

ஆரம்பத்தில் அசோக் செல்வனை தான் இந்த படத்திற்கு இரண்டாவது கதாநாயகனாக போட்டார்களாம். ஆனால் அசோக் செல்வன் திடீர் என்று இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதிலாக வேறு ஒரு ஹீரோவை இந்த படத்திற்கு தேடினார்கள். அப்படித் தேடும்போது அட்டகத்தி தினேஷ், பா ரஞ்சித் கண்ணில் படவே அவரையே இரண்டாவது கதாநாயகனாக தேர்வு செய்துள்ளார்.

ஆனால் அட்டகத்தி தினேஷ் இந்த படத்திற்கு ஏற்றவாறு உடம்பை குறைக்க சொல்லி இருக்கிறார் பா ரஞ்சித். ஆனால் அவரால் உடம்பை குறைக்க முடியவில்லை. அதனால் அட்டகத்தி தினேஷை ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திலிருந்து தூக்கி எறிந்துவிட்டு கலையரசன் என்ற படத்தில் இரண்டாவது ஹீரோவாக போட்டுவிட்டார்.

ஏற்கனவே பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படத்தில் கலையரசன் நடித்திருந்தது பிடித்துப்போக அவரையே மீண்டும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக பா ரஞ்சித் தேர்ந்தெடுத்து அந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

Trending News