புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஸ்ருதிஹாசனுக்கு குடைச்சல் குடுக்கும் பிரபல நடிகர்.. உலக நாயகன் மகளுக்கே இந்த நிலையா?

ஸ்ருதிஹாசன் உலக நாயகன் மகள் என்பதால் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் அவருக்குத் தனி மரியாதை இருக்கிறது. அப்படிப்பட்ட ஸ்ருதிஹாசனையே பிரபல நடிகர் தன் ஆதிக்கத்தால் அலைக்கழித்ததாக ஒரு தகவல் வெளியாகி மொத்த சினிமாவுட்டையுமே பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி தனிப்பாடலுக்கு இசையமைப்பது, பாடுவது என பன்முகக் கலைஞராகவும் ஜொலித்து வருகிறார். சமீபத்தில் அவர் தன் காதலர் சாந்தனுவுடனான காதலை பிரேக் அப் செய்துவிட்ட நிலையில் தற்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

டகோய்ட்; தி லவ் ஸ்டோரி

லோகேஷ் கனகராஜ் – ஸ்ருதிஹாசன் கூட்டணியில் இனிமேல் ஆல்பம் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் சில மாதங்களுக்கு முன் டகோய்ட்; தி லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தை சனைல் தியோ இயக்க, ஹோரோவாக ஆத்விசேஸ் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ரசிகர்களைக் குறிவைத்து இருமொழிப் படமாக உருவாகி வருவதாக தகவல் வெளியானது.

இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக கமிட் ஆன நிலையில் சில நாட்களாக பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டு ஸ்ருதிஹாசன் நடித்து வந்தார். இப்படத்தில் நடித்து வருவது பற்றி ஸ்ருதிஹாசன் இது ஒரு இனிமையான அனுபவம் என்று கூறி ஆத்விசேஷுடன் செல்ஃபி எடுத்து அதை தன் சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகிறது.

ஆதிக்கம் செலுத்திய ஹீரோ

அதாவது, ஆரம்பத்தில் ஸ்ருதிஹாசனுடன் ப்ரெண்ட்லியாக பழகி வந்தா ஹீரோ ஆத்விசேஷ், தான் ஒரு நடிகர் என்பதைத் தாண்டி, தன் செல்வாக்கினால், இயக்குனரை மீறி ஷூட்டிங்கில் அதிக குறுக்கீடு செய்ததாகவும், இது அப்படத்தில் நடிக்கும் சக நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் இடையூறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னணி நடிகையான ஸ்ருதிஹாசன் ஹீரோவின் ஆதிக்கத்தினாலும் அவரது தலையீடு அதிகரித்த காரணத்தினாலும் அப்படத்தில் இருந்து வெளியேறி விட்டார் எனத் தகவல் வெளியாகிறது.

மேலும், இப்படத்தின் இயக்குனர் ஷனைல் தியோ உடன் இணைந்து, ஆத்விசேஷ் கதை எழுதியுள்ளதால் தான் விருப்பப்படியும், நினைத்தபடி காட்சிகள் நன்றாக பர்பெக்ட்டாக வர வேண்டும் என நினைத்து இப்படி அவர் நடந்திருக்கலாம். ஆனால், அந்தளவு மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்படி அவரது செயல்பாடுகள் அமையவில்லை என சினிமா வட்டாரத்தில் ஒரு ஒரு தகவல் வெளியாகிறது.

கொஞ்சம் பொருத்துப் போகலாமா? ரசிகர்கள் விமர்சனம்

இந்த நிலையில் முதல்கோணல் முற்றிலும் கோணல் என்றபடி, ஸ்ருதிஹாசன் இப்படத்தில் இருந்து விலகிவிட்டார் என கூறப்படும் நிலையில் அவருக்கு பதிலாக வேறு ஒரு முன்னணி நடிகை டகோய்ட்; தி லவ் ஸ்டோரி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல். கமல்ஹாசனை போலவே ஸ்ருதிஹாசனும் சுய மரியாதையும் இருப்பவர் என இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்டு கொந்தளித்த அவரது ரசிகர்கள் பலரும் அந்த நடிகருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் ’அங்கு கதையில் ஹீரோவின் பங்களிப்பும் இருந்தால், அதை பொருத்துக் கொண்டு ஸ்ருதிஹாசன் நடித்துக் கொடுக்க வேண்டியதுதானே? எத்தனையோ பேர் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்’ என மற்றொரு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


adivi sesh


Trending News