சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

திருமணத்திற்குப்பின் மார்க்கெட்டை இழக்கும் நயன்தாரா.. நம்பர் 1 இடத்தைப் பிடித்த நடிகை

கோலிவுட் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட மூன்றிலிருந்து ஐந்து கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். இவரைத் தொடர்ந்து சமந்தா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில் தற்போது நயன்தாராவை பின்னுக்கு தள்ளி பிரபல நடிகை நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளார். சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்திலேயே நயன்தாராவின் இடத்தை பிடித்துள்ளதால் இந்த செய்தி கோலிவுட்டில் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதைத் தொடர்ந்த தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இவர் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பான் இந்திய படமான ராதே ஷ்யாம், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், தெலுங்கில் ஆச்சாரியா ஆகிய படங்களில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாகி இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக பூஜா ஹெக்டே மாறியுள்ளார்.

இதனால் தற்போது பூஜா ஹெக்டேவின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. மேலும் பாலிவுட்டில் ரன்வீர் சிங் ஜோடியாக கிரிக்ஸ் என்ற படத்திலும், சல்மான் கான் ஜோடியாக கபி ஈத் கபி தீவாளி ஆகிய படங்களில் பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.

இதனால் தற்போது ஒரு படத்திற்கு 5 கோடி வரை பூஜா ஹெக்டே சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நயன்தாராவுக்கு தற்போது திருமணம் ஆகி உள்ளதால் அவரால் நிறைய படங்களில் நடிக்க முடியாது என்றும் அந்த படவாய்ப்புகள் பூஜா ஹெக்டேவிற்கு தான் போகும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

Trending News