வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

படிப்பை பாதியில் நிறுத்திய ஆலியா மானசா.. என்ன படிச்சிருக்காங்க தெரியுமா.?

வெள்ளித்திரையில் இருக்கும் கதாநாயகிகளுக்கு எந்த அளவு ரசிகர் கூட்டம் இருக்கிறதோ, அதே அளவிற்கு சின்னத்திரை கதாநாயகிகளுக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை ஆலியா மானசா.

இவர் தொடக்கத்தில் டான்ஸராக இருந்து அதன் பின் தற்போது சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர் ராஜா ராணி சீரியலில் தன்னுடன் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில்,

தற்போது அவருக்கு அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பின்பு சில நாட்கள் இடைவேளை எடுத்த ஆலியா தற்போது மீண்டும் ராஜா ராணி2 சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவருக்கு சமூக வலைதளங்களிலும் எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர்களுடன் எப்பவுமே ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவாரசியமாக பதிலளிப்பது இவருடைய வழக்கம்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர், ‘நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?’ என்று கேட்ட கேள்விக்கு ஆலியா, ‘நான் 12வது வரைதான் படித்துள்ளேன். அதன்பின்பு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதற்காக எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்தேன்.

alya-manasha-1
alya-manasha-1

ஆனால் அந்தப் படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே நிறுத்திவிட்டேன்’ என்று வெளிப்படையாக பதிலளித்தார். இத்தகைய தகவலானது தற்போது ஆலியா மானசாவின் ரசிகர்களால் சோஷியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Trending News