திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிம்பு பட ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. பத்து தல படத்துக்கு இவ்வளவு தான் டிமாண்ட்டா!

மாநாடு வெற்றியைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியாகி நல்ல வசூலை பெற்ற படம் வெந்து தணிந்தது காடு. கௌதம் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான இப்படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பது கிடைத்தது.

இதனால் தயாரிப்பாளர் படக்குழுவுக்கு பரிசினை வாரி வழங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார்.

Also Read :சிம்பு கேட்கிற சம்பளத்தை கொடுக்க முடியாது.. தயாரிப்பாளர் சரி சொல்லியும் முட்டுக்கட்டை போட்ட இயக்குனர்

இவர்களைத் தவிர கௌதம் வாசுதேவ் மேனன், டிஜே அருணாச்சலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் சூட்டிங் கர்நாடகா, விசாகப்பட்டினம், கன்னியாகுமாரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இந்த படத்திற்கும் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்து வருகிறார். மேலும் ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் பத்து தல படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்போது படத்தின் இறுதி கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.

Also Read :செம்ம பிஸி, அடுத்தடுத்து சிம்பு உறுதி செய்த 6 படங்கள்.. 2025 வரை என்னோட ராஜ்ஜியம்தான்

இந்நிலையில் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பரைம் பத்து தல படத்தை கைப்பற்றியுள்ளது. ஒரு காலகட்டத்தில் சிம்பு படத்திற்கு மார்க்கெட் இல்லை என்றாலும் தற்போது மாநாடு படத்திற்கு பிறகு அவரது மார்க்கெட் உயரத்தை அடைந்துள்ளது.

ஆனால் பத்து தல படத்தை 26 கோடிக்கு மட்டுமே அமேசான் ப்ரைம் கைப்பற்றியுள்ளது. இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பத்து தல படத்தை தொடர்ந்து சிம்பு கொரோனா குமார் படத்தில் நடிக்க உள்ளார்.

Also Read :பத்து தல முடிச்ச சிம்பு.. 12 வருடங்களுக்கு பின் கையில் எடுத்த சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகம்

Trending News