வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அடுத்த சம்பவத்திற்கு தயாராகும் உலகநாயகன்.. மணிரத்னத்திற்கு முன்பே உருவாகும் மாஸ் படம்

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்த படத்தின் இறுதி படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடந்து வருகிறது. மேலும் கமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தினமும் ஹெலிகாப்டரில் வந்து செல்கிறாராம்.

கமலின் 234 வது படத்தை மணிரத்னம் இயக்க போவது ஏற்கனவே உறுதியானது. ஆனால் அதற்கு முன்னதாகவே பிரபல இயக்குனர் படத்தில் கமல் நடிக்க இருக்கிறார். அதாவது நடிப்பு, தயாரிப்பு என இப்போது முழு வீச்சாக கமல் சினிமாவில் இறங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக இளம் நடிகர்களை வைத்து படம் தயாரிக்க கமல் ஆர்வமாக இருக்கிறார்.

Also Read : கமல் தயாரித்து, நடித்து தல தப்பிய 5 படங்கள்.. சரித்திரம் படைத்து அசர வைத்த தேவர் மகன்

இந்நிலையில் கமலை போலவே இயக்குனர் பா ரஞ்சித்தும் தனது நீலம் ப்ரொடக்ஷன் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். நல்ல கதை அம்சம் கொண்ட குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களை ரஞ்சித் தயாரிக்கிறார். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற யோகி பாபுவின் பொம்மை நாயகி படத்தையும் இவர்தான் தயாரித்தார்.

தற்போது ரஞ்சித் விக்ரமை வைத்து தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகன் மற்றும் பார்வதி ஆகியோரும் நடிக்கிறார்கள். இதில் விக்ரமின் கெட்டப்பை பார்த்து பலரும் வியப்பில் உள்ளனர். அதுமட்டும்இன்றி படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

Also Read : அட! இது அப்படியே கமல் படத்தின் காப்பி.. டாடா படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

இந்த சூழலில் கமலை பா ரஞ்சித் சந்தித்துள்ளார். அதாவது தனது நீலம் புத்தகக் கடையை திறந்து வைக்குமாறு கமலிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் கமல், ரஞ்சித் இணையும் படம் குறித்தும் பேச்சு வார்த்தை நடந்துள்ளதாம். ஏற்கனவே கமலை வைத்து மதுரை ஸ்டைலில் ஒரு படம் எடுக்க ஆர்வமாக இருப்பதாக ரஞ்சித் கூறியிருந்தார்.

இந்த கதை விவாதமும் அப்போது சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகையால் விரைவில் இவர்களது கூட்டணியில் படம் உருவாக இருக்கிறது. இப்போது தங்கலான் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்ததாக கமலை வைத்து பா ரஞ்சித் படம் இயக்க உள்ளார். அதன் பிறகு தான் மணிரத்தினம் படத்தில் கமல் நடிக்கவிருக்கிறார்.

Also Read : ராஜமவுலியை ஒரே சீனில் மிரட்டி விட்ட லோகேஷ்.. கமல் முன்னாடி நடந்த சுவாரசியமான சம்பவம்

Trending News