
Gossip: அந்தப் பெரிய இயக்குனருக்கு இப்போது நேரம் சரியில்லை. நீண்ட காலம் கழித்து படத்தை இயக்கியவருக்கு திரும்பிய பக்கம் எல்லாம் அடி கிடைத்தது தான் மிச்சம்.
வேர்ல்ட் நடிகர் படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிலீசுக்கு பிறகு இயக்குனரை கழுவி ஊற்றாத ஆட்களே இல்லை. அது போல் தயாரிப்பு தரப்புக்கும் பெரும் நஷ்டம்.
ஆனாலும் இயக்குனர் இப்போது தன் சிஷ்யனை மிஞ்ச துடிக்கிறாராம். கன்டென்ட் இல்லை என்றாலும் மேக்கிங் வைத்து நம்பர் ஒன் இயக்குனர் ஆகிவிட்டார் அந்த பிரபலம்.
சிஷ்யனை மிஞ்ச துடிக்கும் குரு
அதே பாணியை இயக்குனரும் பயன்படுத்தினால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை. இருந்தாலும் அடுத்ததாக அந்த வரலாற்று படத்தை கையில் எடுத்துள்ளார்.
அந்த பெரிய நிறுவனத்திடம் நடத்திய பேச்சுவார்த்தையில் இயக்குனருக்கு தோல்வி தான் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே பெரிய ஹீரோக்களை வைத்து அடுத்தடுத்த நஷ்டத்தை சந்தித்திருக்கிறது அந்த நிறுவனம்.
அதில் இயக்குனர் கொடுத்த அடி தான் அதிகம். மறுபடியும் உங்ககிட்ட சிக்க எனக்கு தெம்பு இல்ல என தயாரிப்பாளர் நைசாக கலந்து கொண்டாராம்.
இதனால் அந்த படத்தை எப்படி பிக்கப் செய்வது என்ற யோசனையில் இருக்கிறார் இயக்குனர். ஆனால் இதெல்லாம் வேண்டாத வேலை என்கிறது கோடம்பாக்க வட்டாராம்.