திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கர் மகன்.. யார் டைரக்டர் தெரியுமா.?

Shankar: பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்ற ஷங்கர் ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து முதல்வன், சிவாஜி, எந்திரன் போன்ற ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.

கடைசியாக கமலின் இந்தியன் 2 மற்றும் ராம்சரனின் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்தியன் 3 படம் இப்போது உருவாகி வருகிறது. ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளார். இதில் இளைய மகள் அதிததி ஷங்கர் தான் கதாநாயகியாக படங்களில் நடித்து வருகிறார்.

ஷங்கரின் மகனை இயக்கும் பிரபல இயக்குனர்

இந்த சூழலில் ஷங்கரின் மகன் அர்ஜித் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். அவரின் படத்தை இயக்கப் போவது பிரபுதேவா. இயக்குனர், நடன இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர்தான் பிரபுதேவா.

இவர் சமீபத்தில் தனது மகன் ரிஷி ராகவேந்திராவை நடன நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியிருந்தார். இப்போது ஷங்கரின் மகனையும் சினிமாவில் அறிமுகம் செய்ய உள்ளார் பிரபுதேவா. இயக்குனராக போக்கிரி, எங்கேயும் காதல் போன்ற வெற்றி படங்களை பிரபுதேவா கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் ஷங்கரும் தனது மகனை பிரபுதேவாவை நம்பி ஒப்படைத்திருக்கிறார். மேலும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

Advertisement Amazon Prime Banner

Trending News