தற்போது தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூலில் வேட்டையாடி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிறது. விஜய் தொடர்ந்து இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தன்னுடைய 66 ஆவது படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் பேட்டி அளித்த இயக்குனர் விஜய்யை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். விஜய் ஆக்சன் ஹீரோவாக நடித்து வந்த நேரத்தில் காமெடியில் கலக்க முடியும் என நிரூபித்தவர் கேஎஸ் ரவிக்குமார். இரண்டு கதைகளை விஜய்யிடம் எடுத்துச் சொல்லும்போது கே எஸ் ரவிக்குமாரின் கதையை விஜய் ஓகே சொல்லியுள்ளார்.
அப்போதுதான் உருவான படம் மின்சார கண்ணா. விஜய்யிடம் நிறைய ஹூமர் சென்ஸ் இருப்பதாகவும், அதனால்தான் அந்தப் படம் காதல் கலந்த காமெடி படமாக எடுக்கப்பட்டு மிகப் பெரிய ஹிட்டானது என ரவிக்குமார் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் காமெடி கேரக்டர் எனக்கு வேண்டும் என விஜய் கேட்டு நடித்ததாக கூறினார்.
அதன் பின்பு விஜய்யை வைத்து 3 படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது சந்தர்ப்பவசத்தால் கைநழுவி போனது. இனிவரும் காலத்தில் அவருடைய படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். இல்லையென்றாலும் அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பாவது கிடைக்கும்.
மேலும் அவருடன் ஏற்கனவே நடித்த அனுபவம் எனக்கு உள்ளது என கேஎஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் கூறியிருந்தார். மேலும் விஜய் ஒரு விஷயத்தை மனதில் நினைத்து விட்டால் வைராக்கியமாக அதை செய்துமுடிக்க கூடியவர் என விஜய்யை பற்றி சுவாரசியமான தகவல்களை அந்தப் பேட்டியில் கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்துகொண்டார்.