வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

4-வது முறையாக தளபதி விஜய்யுடன் ஜோடி சேரும் நடிகை.. தளபதி 67 படத்தின் தெறிக்கவிடும் அப்டேட்!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறாத நிலையில், தளபதியின் அடுத்த படமான தளபதி 66  படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் படமாகவே உருவாகும் என படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருந்த நிலையில், தளபதியை மாஸ் ஆகவே பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது பெரிதும் ஈடுபாடு காட்டாமல் உள்ளனர்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தின் டிரைலரை பார்த்த பிறகு லோகேஷ் கனகராஜ் தான் தளபதியின் 67-வது படத்தை இயக்கப்போகிறார் என தெரிந்ததும் தளபதியின் அடுத்த மாஸ் திரைப்படம் லோடிங் என விஜய்யின் 67-வது திரைப்படத்தை குறித்து கொண்டாடுகின்றனர்.

அத்துடன் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெறி, மெர்சல், கத்தி போன்ற படத்தை தொடர்ந்து 4-வது முறையாக சமந்தா கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து தெலுங்கில் ‘குஷி’ என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்த நிலையில் படம் வரும் டிசம்பர் மாதம் 23-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படம் முடித்த கையோடு சமந்தா தளபதியின் 67-வது படத்தில் நடிக்க தயாராகிறார்.

மாஸ்டர், விக்ரம் என அனிருத் இசையில் படத்தை இயக்கிக் கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய்யின் 67- வது படத்தை யுவன்சங்கர் ராஜாவுடன் இணைகிறார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜயுடன் மீண்டும் இணைவதை வைத்து சோஷியல் மீடியாவில் அவருடைய ரசிகர்கள் கெத்துக் காட்டுகின்றனர்.

தளபதி விஜய்-லோகேஷ் கனகராஜ் காம்போ-வில் சமந்தாவும் இணைகிறார் என்ற தகவல் தெரிந்ததும் தளபதியின் 67-வது திரைப்படம் தளபதி மாஸ் காட்டும் படமாகவே இருக்கும் என ரசிகர்களை குத்தாட்டம் போட்டுக் கொண்டாடுகின்றனர்.

Trending News