புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தற்கொலை வரை சென்ற கமல்.. கடைசி நேரத்தில் ஆண்டவரே காப்பாற்றிய உயிர் நண்பன்

Actor Kamal: சினிமா என்பதை தாண்டி எந்த ஒரு தொழிலை எடுத்துக் கொண்டாலும் அதில் சாதித்தவர்களின் சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால் அவர்கள் பட்ட கஷ்டம் மிகவும் கொடியதாக இருக்கும். ஒரு கட்டத்தில் வாழ்க்கையே வெறுத்து போன நிலையில் அதிலிருந்து பீனிக்ஸ் பறவையாக விஸ்வரூபம் எடுத்தவர்கள் பலர் உண்டு.

அப்படிதான் கமல் சின்ன வயதிலேயே சினிமாவில் பயணிக்க தொடங்கினாலும் உயரமான சருக்களை சந்தித்திருக்கிறார். இப்போது உலக நாயகன், ஆண்டவர் என கொண்டாடப்படும் கமல் அந்த காலகட்டத்தில் பல இன்னல்களை சந்தித்திருக்கிறார். அப்படிதான் கமல் தற்கொலை செய்யவும் நினைத்திருந்தார் என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.

Also Read : கமல், விஜய் தான் எங்களை காப்பாத்தினாங்க.. ரஜினி என்னத்த கிழிச்சாரு? எப்போதுமே உலக நாயகன் பெஸ்ட்!

அப்போது சரியான நேரத்தில் அவருக்கு சில அறிவுரை சொல்லி காப்பாற்றியது கமலின் உயிர் நண்பன் தான். அதாவது இயக்குனர் இமயத்தின் வலது கை என்று சொல்லக்கூடியவர் தான் ஆனந்து. இவர் கதை, திரைக்கதை, இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்களை கொண்டு உள்ளார்.

இவரைப் பார்த்த உடனே அவரைப் பற்றிய பல விஷயங்களை உடனடியாகவே சொல்லி விடுவாராம் ஆனந்து. அப்படிதான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானை பார்த்தவுடன் இவர் கண்டிப்பாக சினிமாவில் பெரிய ஆளாக வருவார் என்று கூறினார். கமலின் திரைத்துறையில் ஏற்பட்ட சில மோசமான அனுபவங்கள் அவரை தற்கொலை எண்ணத்தை வரவழைத்தது அதை தடுத்து நிறுத்தியதும் இவர்தான்.

Also Read : ஹீரோயினை விட அழகான 6 சப்போர்ட்டிங் ஹீரோயின்.. அதிலும் ரஜினி, கமல் மருமகள்களின் அழகை அடிச்சுக்க ஆளே இல்லை!

ஆனந்து சிகரம் என்ற ஒரே ஒரு படத்தை மட்டும் தான் இயக்கி இருந்தார். கமலின் குணா போன்ற நிறைய படங்களில் நடித்திருந்தார். கமலை முதலில் பார்த்த உடனே இவர் பிற்காலத்தில் சினிமாவை தன் கையில் வைத்திருக்கும் நபராக இருப்பார் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு கமலின் நெருங்கிய நண்பராகவே மாறிவிட்டார்.

அன்று ஆனந்து மட்டும் கமலுக்கு சிறந்த அறிவுரை கூறாமல் இருந்திருந்தால் இன்று உலக நாயகன் நமக்கு கிடைத்திருப்பாரா என்பது சந்தேகம்தான். அவருக்கு சரியான ஊக்கத்தையும், உத்வேகத்தையும் கொடுத்து தற்கொலை எண்ணத்தை போக்கி தைரியத்தை வரவழைத்திருந்தார். இப்போது கமல் ஒரு விருட்சமாக வளர்ந்து நிற்கிறார்.

Also Read : நெல்சனை வளைக்கும் கமல்.. ரஜினி ஃபார்முலாவை ஃபாலோ பண்ணும் உலகநாயகன்

Trending News